தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை.. மதுரையில் பணியிடம்! செம சான்ஸ் உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் தேர்வு முறையை பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 450 பணியிடங்க நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
சீசனல் பில் கிளர்க் - 150
சீசனல் ஹெல்பர் - 150
சீசனல் வாட்ச்மேன் - 150
என மொத்தம் 450 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
* பில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அறிவியல் / வேளாண்மை / என்ஜினியரிங் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். மதுரையை சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
* ஹெல்பர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
* வாட்ச்மேன் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மூன்று பணியிடங்களுக்குமே மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
சீசனல் பில் கிளர்க்: 18 முதல் 37 வயது வரை
சீசனல் ஹெல்பர்: 18 to 34 வயது வரை
சீசனல் வாட்ச்மேன்: 18 to 32 வயது வரை
சம்பளம்:
சீசனல் பில் கிளர்க்: 5,285 + DA
சீசனல் ஹெல்பர்: 5,218/- + DA
சீசனல் வாட்ச்மேன்: 5,218/- + DA
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணியிடங்கள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும்.
கல்வி மதிப்பெண் பட்டியலுக்கு 50% மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 50% மதிப்பெண் என்ற அடிப்படையிலும், பருவகால காவலர்களுக்கு 100% மதிப்பெண்களும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் நெல்கொள்முதல் தொடர்பானதும், முற்றிலும் தற்காலிகமானதாகும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் 10.02.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2025 @ 05.00 PM ஆகும்.
விண்ணப்பம் வந்து சேரவேண்டிய முகவரி:
துணை ஆட்சியர் / மண்டலமேலாளர்,
த.நா.நு.பொ.வா.கழகம்,
லெவல் 4 பில்டிங், 2-வது தளம்,
BSNL வளாகம், தல்லாகுளம்,
மதுரை-625 002.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications