தமிழக அரசு வேலை.. எக்ஸாம் கிடையாது! மாதம் ரூ.71 ஆயிரம் சம்பளம்! இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது
சென்னை: சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகின்ற, தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை (Tamil Nadu Government Job) அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 56 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு எதுவும் கிடையாது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 71,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசிதழ்கள் / சிறப்பு வெளியீடுகள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நடவடிக்கைக் குறிப்புகள், பல்வேறு சட்டமன்ற குழுக்களின் அறிக்கைகள், வரவு செலவு திட்ட ஆவணங்கள் அதிரகசிய பணிகள், தேர்தல் படிவங்கள், பதிவேடுகள், கையேடுகள் மற்றும் வாக்குச் சீட்டுகள், தமிழ்நாடு மாநில கணக்காய்வுத் தலைவரின் அறிக்கைகள் உள்ளிட்ட அரசின் பல முக்கிய ஆவணங்கள் இங்குதான் அச்சிடப்படுகின்றன.

அரசுக்கு சொந்தமான அலுவலகத்தில் காலியாக உள்ள 56 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. உதவி ஆஃப்செட் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர் - 19
2. ஜூனியர் எலக்ட்ரீஷியன் - 14
3. ஜூனியர் மெக்கானிக் - 22
4. பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியன் - 01 என மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வித் தகுதி:
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, ஆஃப்செட் இயந்திர டெக்னிஷியன் உதவி பணிக்கு பிரிண்டிங் டெக்னாலஜி அல்லது ஐடிஐ பிரிவில் டெக்னிக்கல் ஆஃப்செட் மெஷின் பாடம் எடுத்து படித்து இருக்க வேண்டும். அனுபவமும் கோரப்பட்டுள்ளது. பிளம்பர் மற்றும் எலக்ட்ரிஷியன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அத்துடன் பிளம்பரிங் பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிசி / எம்பிசி, மற்றும் டிஎன்சி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகவும், எஸ்சி/ எஸ்டி, எஸ்சிஏ ஆகிய பிரிவினருக்கு 37 வயது ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 19,500 - 71,900/- வரை சம்பளமாக வழங்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யபடுவார்கள். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் (உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும்).
மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், முன்னுரிமைக்குரிய (Priority) சான்றிதழ், தமிழ் வழிக் கல்வி (PSTM) சான்றிதழ், வயதுக்குரிய சான்றிதழ், முகவரிக்கான சான்றிதழ் மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் சுய சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பத்தினை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் இணைத்து 19.09.2025 மாலை 05.30 மணிக்கு முன்பாக அலுவலகத்தில் கிடைத்திடுமாறு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உறையின் மேல் "வேலைவாய்ப்பு விண்ணப்பம் - (விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்) "எனக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர்,
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
ஆணையரகம்,
110, அண்ணா சாலை,
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.stationeryprinting.tn.gov.in/ComNoB2-19303-2025-dtd-19-8-2025.pdf
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications