அரசு பணியில் சேர்பவர்களுக்கு.. இனி கட்டாய நேரடி போலீசார் சரிபார்ப்பு.. தமிழக அரசு முக்கிய முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் இனி அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆகியவை மூலம் பணியில் சேர உள்ளவர்களுக்கு கட்டாயம் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்பின் அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது. இனி பணியில் வருபவர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக முழுமையான பின்னணி சரிபார்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக போலீசார் அறிவித்து உள்ளனர். இதில் போலீசார் ஒருவரை பற்றி நெகட்டிவ் ரிப்போர்ட் அளித்தால் அவர்களை பற்றி ஆட்சியர் அலுவலகம் சோதனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நிலையில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி IV, 2024 உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086-2) நிரப்பப்படவுள்ளன.
காலிப்பணியிடங்கள் கூடுதலாக எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் 67687 கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பணியிடங்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை தேர்வாணையம் சார்பாக வெளியிட்டு உள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பின்வரும் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது:
1. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.
2. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம்.
3. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
4. தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications