ZOHO நிறுவனத்தில் வேலை.. சென்னை, கோவை, மதுரை, சேலத்திலேயே பணி.. நல்ல சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் க்யூ என்ஜினீயர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் அவ்வப்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஜோஹோ நிறுவனத்தில் தற்போது க்யூஏ என்ஜினீயர்ஸ்(QA Engineers) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நிறையபேர் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா ப்ரோகிராமிங் (டேட்டா டைப்ஸ், வேரியபிள்ஸ், ஆபரேட்டர்ஸ், ப்ளோ கன்ட்ரோல் ஸ்டேட்மேன்ட்ஸ், மெத்தட்ஸ்) தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு manual and automation testing பிரிவில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் MySQL/PqSQL, Selenium, Jmeter-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதோடு Re Test மற்றும் Bugs உள்ளிட்ட பிரச்சனையை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். மேலும் இந்த க்யூஏ என்ஜினீயர்ஸ் பணிக்கு மாதம் வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சென்னை, மதுரை, நெல்லை, சேலம் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய் விரும்புவோர் ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications