TCS வேலைவாய்ப்பு.. சென்னை உள்பட 4 இடங்களில் பணி.. பிப்ரவரி 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ
சென்னை: சென்னை உள்பட 4 இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 15ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என அழைக்கப்படும் இந்த நிறுவனம் டாடா குழுமத்தை சேர்ந்தது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இப்போது ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் (Automation Testing) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு Selenium Cucumber java test Automationல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் வெப் என்விரான்மென்ட்,வெப் எலிமென்ட்ஸ், ஆபரேஷன் ஆன் தி வெப் எலிமென்ட்ஸ் உள்ளிட்டற்றில் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும்.
செலினியம் சூட் ஆஃப் டூல்ஸில் செலினியம் ஐடிஇ, செலினியம் ஆர்சி, செலினியம் வெப் டிரைவர், செலினியம் கிரிட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். ஜாவா புரோகிராமிங் தெரிந்திருக்க வேண்டும். டீபக்கிங் டெஸ்ட் கேசஸ் மற்றும் பிக்சிங் எரர் தெரிந்திருக்க வேண்டும்.
எஸ்க்யூஎல் மற்றும் யுனிக்ஸ் உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். இதற்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 15ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க் மூலம் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications