TCS வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 5ம் தேதி ஆன்லைனில் இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி
சென்னை: டிசிஎஸ் நிறுவனம் சார்பில் பணிக்கு தேவையான ஆட்கள் பிப்ரவரி 5ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளனர். அன்றைய தினம் ஆன்லைனில் நடக்கும் இண்டர்வியூவில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் தான் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். சுருக்கமாக டிசிஎஸ் என அழைக்கப்படுகிறது. நம் நாட்டின் பல்வேறு இடங்களில் டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னையில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில்தான் சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
இப்போது ஐடி துறையில் பணியாற்றுவது என்பது இளைஞர்களின் கனவாக உள்ளது. குறிப்பாக பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போத சிட்ரிக்ஸ் அட்மின் (Citrix Admin) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஸ்கில்செட்டாக Citrix Admin, XenApp & XenDesktop உள்ளிட்டவற்றில் ஸ்கில்செட் கொண்டிருக்க வேண்டும்.
அதோடு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு வரையிலான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ் படிப்புகளை முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டு ஐடி துறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.
கடந்த ஒரு மாதத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிற இண்டர்வியூக்களில் பங்கேற்றவர்கள் இதில் பங்கேற்க அனுமதியில்லை. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 5ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது ஆன்லைனில் தான் நடைபெற உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பள விபரம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications