தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வேலை.. எக்ஸாம் கிடையாது! பத்தாம் வகுப்பு கல்வி தகுதிதான்!
சென்னை: தென்காசியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
தென்காசியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்று இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
டேடா என்ட்ரி ஆபரேட்டர்: 01
அலுவலக உதவியாளர்: 02
என மொத்தம் மூன்று பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர் (சத்துணவு பிரிவு) பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
டேட்டா என்ட்ரி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் டைப்பிங் (லோயர்) ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிற விவரங்கள்:
* டேட்டா என்ட்ரி பணியிடத்திற்கு மாதம் ரூ.15,000/- மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படும்.
* அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ 8 ஆயிரம் வழங்கப்படும்.
* இப்பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
* இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
* பணி நியமனம் செய்பவருக்குரிய அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகும். அவரே தகுதியான ஆட்களை உரிய முறையில் (எழுத்து தேர்வு / நேர்முகத்தேர்வு) தேர்வு செய்வார்.
* வட்டார அலுவலகங்களில் உடன் பணி புரியும் வகையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
* பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களிடமிருந்து ரூ.200/-க்கான முத்திரைத்தாளில் ஒப்பந்தப் பணி பத்திரம் பெறப்படும்.
* பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு, பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும். ஒவ்வொரு 11 மாத காலம் முடிவிற்குப் பின் இடைவெளி விட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும்.
* இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது.
* இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
* தமிழ்நாடு அரசு அலுவலரின் விதிமுறைகள் பொருந்தாது.
விண்ணப்பங்கள் http://tenkasi.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.02.2025, மாலை 5 மணி
விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித் தலைவர்.
(சத்துணவு பிரிவு) அலுவலகம்,
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்,
தென்காசி-627 811.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tenkasi.nic.in/notice_category/recruitment/












Click it and Unblock the Notifications