பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?
சென்னை: நாடு முழுக்க பல லட்சம் ஊழியர்களின் EPFO கணக்கில் ரூ.3000 தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இது மத்திய அரசு சார்பாக ஏப்ரல் மாதத்திற்காக வழங்கப்படும் தொகை ஆகும்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாதம் மாதம் முதல்முறை ஊழியர்களுக்கு இந்த பணம் வரவு வைக்கப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல்முறை பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

என்ன தொகை இது?
புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்காக, ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் சார்பாக EPFO கணக்கு தொடங்கப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் EPFO சுமார் 11.5 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) புதிதாக இணைந்த உறுப்பினர்களின் கணக்கில் குறைந்தபட்சம் ₹3,000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
11.5 லட்சம் ஊழியர்களுக்கு பணம்
தொழில் உற்பத்தித் துறையில் முதல் முறையாகப் பணியில் சேரும் ஊழியர்களின் முதல் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்துகிறது. மேலும், அனைத்துத் துறைகளிலும் புதிதாகப் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, வைப்பு நிதி சந்தாவில் ₹3,000 வரை அரசு வழங்குகிறது.
EPFO-வில் பதிவுசெய்து முதல் முறையாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒரு மாதச் சம்பளத்தை மத்திய அரசு மூன்று தவணைகளில் அவர்களின் EPFO கணக்கில் செலுத்தும். இதன் மூலம் அதிகபட்சமாக ₹15,000 வரை மத்திய அரசு செலுத்துகிறது. இதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ₹1 லட்சம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் EPFO-வில் இணைந்த 11.5 லட்சம் உறுப்பினர்களுக்கு, குறைந்தபட்சம் ₹3,000 அவர்களின் பிஎஃப் வங்கிக் கணக்கில் நேரடியாக ஜனவரி மாதத்தில் செலுத்தப்படும். இது அவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குச் செல்லாமல் பிஎஃப் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும்.
EPFO-வில் இணைந்த உறுப்பினர்களுக்கு பணம்
EPFO தற்போது பல முக்கியமான மாற்றங்களைச் செயல்படுத்த உள்ளது. இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எளிதாக எடுக்க முடியும். தற்போதுள்ள சிக்கலான நடைமுறையைத் தவிர்த்து, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அதன் உறுப்பினர்களுக்குப் பல மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள், வருங்கால வைப்பு நிதி (PF) விவரங்களை அணுகுவதையும், PF கணக்குகளை மாற்றுவதையும் எளிதாக்குகின்றன.
EPFO பக்கத்தை அணுகுவது கடினம்
முன்பு EPFO பக்கத்தை அணுகுவது கடினமாக இருந்தது. பல சமயங்களில் இணையதளம் செயல்படாததால், பல சேவைகளைப் பெற முடியவில்லை. EPFO சேவைகளை எளிதாக்கும் வகையில் தற்போது பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
'Passbook Lite' சேவை மூலம் PF இருப்பை விரைவாக சரிபார்க்க முடியும். அத்துடன், வேலை மாறுபவர்களுக்குத் தேவையான 'Annexure K' பரிமாற்றச் சான்றிதழை ஆன்லைனில் அணுகும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, புகார்களைக் குறைத்து, PF தகவல்களைப் பெறுவதை எளிமையாக்கும்.
இதுவரை, ஊழியர்கள் தங்கள் PF பங்களிப்புகள் மற்றும் திரும்பப் பெறும் விவரங்களைக் காண தனி 'Passbook' போர்ட்டலில் உள்நுழைய வேண்டியிருந்தது. 'Passbook Lite' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒரே உள்நுழைவு மூலம் EPFO உறுப்பினர் போர்ட்டலிலேயே இந்தத் தகவலை நேரடியாகப் பெறலாம்.
'EPFO - Passbook Lite' தனித்தனி போர்ட்டல்களுக்கு மாற வேண்டிய அவசியமின்றி ஒரே உள்நுழைவு மூலம் EPFO விவரங்களை அறிய உதவுகிறது. PF இருப்பு, எடுத்த தொகை, எடுக்கக்கூடிய தொகை, மற்றும் ஓய்வூதியத் தொகை போன்ற விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். விரிவான பதிவுகளை விரும்பும் பயனர்கள் பழைய 'Passbook' தளத்தைப் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, ஒரு மென்பொருள் பொறியாளர் தனது புதிய நிறுவனத்தில் எத்தனை மாதத்திற்கான PF பங்களிப்பைச் செலுத்தியுள்ளார் என்பதைச் சரிபார்க்க முன்பு தனி 'Passbook' போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். தற்போது, ஒரே உள்நுழைவு மூலம் அனைத்து விவரங்களையும் உடனடியாகச் சரிபார்த்து, நேரத்தையும் மன உளைச்சலையும் மிச்சப்படுத்தலாம்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications