தென்காசி மாவட்டத்தில் மினி கிளினிக்கிற்கு செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மினி கிளினிக்கிற்கு செவிலியர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்காசி மாவட்டத்தில் செயல்படும் 41 மினி கிளினிக் மற்றும் நல்வாழ்வு மையங்களில் உள்ள கீழ்கண்ட பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 13.02.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

செவிலியர்-41 பணியிடங்கள்
வயது: 35 வயதுக்குள்
கல்வி தகுதி: இந்திய செவிலியர் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்லூரியில் பெறப்பட்ட பட்டயர் சான்றிதழ். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்த சான்று
ஊதியம்: 14000 ரூபாய்
பல்நோக்கு சுகாதார பணியாளர்: 41 பணியிடங்கள்
வயது: 40 வயதுக்குள்
8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம்:9000 ரூபாய்
நிபந்தனைகள்
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது
பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
துணை இயக்குனர், சுகாதார பணிகள்
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம்
தணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகம்
சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம்
குறிப்பு
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்
விண்ணப்பங்களை அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்
மின்னஞ்சல் முகவரி: (இமெயில் ஐடி) [email protected]
மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது" இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications