நோ எக்ஸாம்.. டிகிரி போதும்! தமிழ்நாடு வனத்துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு.. தஞ்சாவூரில் தான் பணி!
தஞ்சாவூர்: தமிழ்நாடு வனத்துறையில் தஞ்சாவூர் வனக்கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி படித்து முடித்தவர்கள் இந்த பணிக்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் மாவட்டங்கள் வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது தஞ்சாவூர் வனக்கோட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

தஞ்சாவூர் வனக்கோட்டத்தில் தற்போது தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) மற்றும் தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி வனவியல்/வேளாண்மை அல்லது எம்எஸ்சி வனவிலங்கு உயிரியல், லைப் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், நேச்சுரல் சயின்ஸ் அல்லது அதற்கு இணையான 2 ஆண்டு அனுபவம் கொண்ட கள ஆராய்ச்சி செய்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எம்சிஏ அல்லது அதற்கு சமமான எம்ஐஎஸ்/ஜிஐஎஸ் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர தமிழ்நாடு வனத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4,800 மற்றும் அதற்கு மேலான அனுபவத்துடன் ஒய்வு பெற்றவர்களும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பட்டம்/டிப்ளமோ படிப்புடன் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் சான்றிதழுடன் முடித்து 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அல்லது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பிரிவில் சான்று பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாதம் 26ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ‛‛மாவட்ட வனஅலுவலர், மாவட்ட வன அலுவலகம், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் - 613 403, தொலைபேசி எண் 04362 - 264669, Email ID: [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. தற்போதைய இந்த அறிவிப்பின் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவரும், டேட்டா என்டரி ஆபரேட்டர் பணிக்கும் ஒருவர் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும் இது ஒரு தற்காலிக பணியாகும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
IT JOBS: 11 பிரிவுகளில் ஐடி வேலை.. மார்ச் 14ல் இண்டர்வியூ.. சென்னை - பெங்களூரில் வேலை -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications