திருப்பூர் இளைஞர்களுக்கு குட்நியூஸ்.. வரும் வெள்ளிக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க.. அரசு அதிரடி
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜனவரி 31-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற போகிறது. பணிக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தமிழ்நாட்டில் படித்து முடித்த பலர் சேரவிரும்புவது அரசு வேலைதான். ஆனால் அனைவருக்கும் அரசு வேலை கொடுப்பது என்பதால் அரசாங்கத்தாலேயே சாத்தியம் இல்லாத ஒன்று. அதேநேர்ம் தனியார் துறையில் திறமையானவர்களுக்கு, திறமைகளை வளர்த்துக் கொண்டு செயல்படத்தெரிந்தவர்களுக்கும் எப்போதுமே ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

தமிழக அரசு தனியார் துறையில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு வகையான வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் ஆகியவற்றை பொருந்து விரும்பிய வேலைகளை தேர்வு செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மொத்தம் 42 துறைகளில் எட்டாயிரம் நிறுவனங்கள் இதுவரை வேலைக்கு தேவையானர்கள் தேர்வு செய்திருக்கின்றன. சென்னை, திருப்பூர், திருவள்ளூர் , கடலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்பட பல்வேறு ஊர்களில் ஏராளமான வேலைகள் இருக்கின்றன. மாவட்டத்தை செலக்ட் செய்து வேலை காலியிட விவங்களை அறியலாம் சம்பளம் 10000 முதல் 25000 வரையிலும், சில பணிகளுக்கும் 30000க்கும் மேலும் சம்பளம் தரப்படுகின்றன..
எந்தெந்த வேலைகள் உங்களுக்கு செட் ஆகும் என்பததை பார்த்து ஆன்லைனிலயே விண்ணப்பிக்கலாம். இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினமும் ஏராளமான நிறுவனங்கள் இதில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறன்றன. பலரும் வேலைக்கு தேவையானவர்கள் இதில் பதிவு செய்தால் தேர்வு செய்கின்றனர். தனியார் நிறுவனங்களில் வேலை தேடுவோருக்கு சிறந்த இணையதளமாக இது பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் எனில், தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிக்கடி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 31-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை அளிக்கும் நிறுவனங்களால் தேர்வு செய்யப்படும் வேலைநாடுபவர்களுக்கு முகாம் நடக்கும்போது பணிநியமன ஆணை வழங்கப்படும்.
பணிக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைதேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். மேலும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications