காவலர்களின் பிள்ளைகளுக்கு.. அரசு மற்றும் தனியாரில் வேலைவாய்ப்பு.. உருவாக்கப்பட்ட புது பிரிவு!
சென்னை: தமிழ்நாடு காவல் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக காவல்துறை தலைமையகம் சார்பாக புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக காவல்துறை நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. காவலர்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் டிஜிபி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இந்த பிரிவு இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்த வெல்ஃபேர் விங் அமைப்பிற்கு கீழ் புதிய பிரிவு ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. 'காவல்துறையினரின் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு பரிமாற்றம்' என்ற பெயரில் இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க காவல்துறையில் வேலை பார்க்கும் நபர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதில் உதவும் பிரிவு ஆகும். அரசு மற்றும் தனியாரின் இவர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கவும், வேலை தேடுதலில் இவர்களுக்கு வழிகாட்டவும், தகவல் பரிமாறவும் இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கே வேலை வாய்ப்பு உள்ளது, எங்கெங்கே விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு இந்த அமைப்பு வழங்கும். காவல்துறையினரின் வாரிசுகள் பயன்பெறும் வகையில் இந்த நலத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு மூலம் பயன் பெற விரும்பும் காவல்துறையினர் தங்களின் விவரங்கள் மற்றும் தங்களின் குழந்தைகளின் விவரங்களின் தெரிவிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பி இந்த மாதம் 25ம் தேதிக்குள் அதை தங்கள் பகுதி வெல்ஃபேர் விங் அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹10 லட்சம் கார் முன்பணம், பண்டிகை முன்பணம்? புது விதி? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications