தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர் வேலை.. விண்ணப்பிப்போர் கவனிக்க வேண்டியவை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி எழுத்துத் தேர்விற்கு இன்று முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து நிரப்புவதற்கு உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிப்போர் கவனிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.

வேலை: அரசு வேலை
வேலை தரும் நிறுவனம்: தமிழக அரசு
காலிப் பணியிடங்கள்: மொத்தம் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அதிகாரப்பூர்வ இணையதளம் (trb.tn.gov.in) மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத் தொடக்கம்: இன்று (அக்டோபர் 17, 2025) முதல் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: நவம்பர் 10, 2025 அன்று மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
திருத்தம் : விண்ணப்பத்தைத் திருத்தம் செய்ய, நவம்பர் 11 முதல் நவம்பர் 13, 2025 வரை கால அவகாசம் கொடுக்கப்படும்.
கல்வி மற்றும் தகுதி
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் (Master's Degree) பெற்றிருக்க வேண்டும். (சலுகை பிரிவினருக்கு 50%).
கட்டாயத் தகுதி: NET/SET/SLET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது UGC விதிகளின்படி Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஜூலை 1, 2025 நிலவரப்படி விண்ணப்பதாரர் 57 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். (சலுகைகள் உண்டு).
தமிழ் மொழித் தகுதி: 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
தேர்வு மற்றும் நியமன முறை எப்படி இருக்கும்
தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்:
போட்டி எழுத்துத் தேர்வு : ( டிசம்பர் 20, 2025 அன்று நடைபெறுகிறது ).
நேர்காணல் : எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடைபெறும்
இன்னும் தெளிவாக சொல்வது என்றால், உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இரண்டு தேர்வுகள் ஒரு நாளில் நடைபெறும். காலையில் நடைபெறும் தாள் ஒன்று தேர்விற்கான கேள்வித் தாளில், பகுதி 1-ல் தமிழ்மொழி தகுதித் தேர்விற்கு 30 வினாக்கள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அதில் 40 சதவீதம் மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து பகுதி 2-ல் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.
அதன் பின்னர் பிற்பகலில் நடைபெறும் தாள் 2 தேர்வில், 50 மதிப்பெண்களுக்கு விவரித்து எழுதுக முறையில் ஒரு கேள்வி இடம் பெறும். மேலும், நேர்காணலின் போது அனுபவத்திற்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்களும், நேர்காணலுக்கு 15 மதிப்பெண்களும் அளிக்கப்படும்.
இதுபற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி எழுத்துத் தேர்விற்கு அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான போட்டித் தேர்வு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறும். நேர்காணல் நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பாடவாரியான காலிப் பணியிடத்திற்கான விவரங்கள், கல்வித்தகுதி, வயது மற்றும் விண்ணப்பத்திற்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் trb.tn.gov.in பாருங்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications