அரசு பணிகளுக்கு போட்டித்தேர்வு... திடீரென விதிகளை திருத்திய டிஎன்பிஎஸ்சி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முகமதுசுல்தான் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கியில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதித்துறை அமைச்சுப்பணிக்கு உள்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உதவி பிரிவு அலுவலர் பணிக்கு போட்டித்தேர்வு நடந்து 4 மாதங்களுக்கு பிறகு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்தத வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி டி.என்.பி.எஸ்.சி.க்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முகமதுசுல்தான் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கூறுகையில், "கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-5 ஏ பணியிடங்களை (தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் பணி) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதித்துறை அமைச்சுப்பணிக்கு உள்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உதவி பிரிவு அலுவலர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

அதன்படி நான் உதவி பிரிவு அலுவலர் விண்ணப்பித்தேன்.கடந்த 4.1.2025 அன்று தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதித்துறை அமைச்சுப்பணிக்கு உள்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உதவி பிரிவு அலுவலர் பணிகளுக்கு நடந்த போட்டித்தேர்வை எழுதினேன். சமீபத்தில் உதவி பிரிவு அலுவலர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருந்தது அதில், தலைமை செயலக பணி விதிகளின்படி உதவி அலுவலர் பணிக்கு எனக்கு தகுதியில்லை என கூறப்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, தேர்வு விதிகளில் 26.5.2025 அன்று திருத்தம் செய்யப்பட்டு இருந்தார்கள்.
இந்த தேர்வு நடந்து முடிந்து, 4 மாதங்களுக்கு பிறகு விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்காமல் தேர்வு விதிகளில் மாற்றம் செய்தது சட்டவிரோதம் ஆகும். எனவே தலைமை செயலகத்தின் உதவி அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதிக்க வேண்டும்., தேர்வு விதிகளில் மாற்றம் செய்ததையும், தேர்வானவர்கள் பட்டியலையும் ரத்து செய்ய வேண்டும். எனக்கு தலைமை செயலகத்தின் உதவி அலுவலர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் டி.எஸ்.முகமது முகைதீன் ஆஜராகி, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாகவே விதிகளில் மாற்றம் செய்து இருக்க வேண்டும். தேர்வு நடந்ததற்கு பின்பு பணி விதிகளில் திருத்தம் செய்ததால் மனுதாரர் உள்ளிட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார். விசாரணை முடிவில் நீதிபதி, இந்த தேர்வு தொடர்பான ஆவணங்களை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications