TNPSC GROUP 4: குரூப் 4 தேர்வர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்! இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தற்போது கணினி வழியில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக சான்றிதழ்களை அப்லோடு செய்து வருகிறார்கள். சான்றிதழ் பதிவேற்றம் செய்வதில் தேர்வர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழலாம். இந்த சந்தேகங்களை போக்கும் வகையில், டிஎன்பிஎஸ்சியும் சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து வருகிறது. தமிழ் வழி சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் ஆகியனவை எப்படி அப்லோடு செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு நடத்தப்பட்டு 3 மாதத்திற்குள் இந்த முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

7 ஆம் தேதி தான் கடைசி
ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கணினி வழி திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் விவரங்கள் (வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் - பழங்குடி இளைஞர்கள் ஆகிய பதவிகள் தவிர) www.tnpsc.gov.in
என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) பிரிவு வாயிலாக நவம்பர் 7-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
அதன்படி தேர்வர்கள் தற்போது கணினி வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு சான்றிதழ்களை அப்லோடு செய்து வருகிறார்கள். தேர்வர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில், டிஎன்பிஎஸ்சியும் சில சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக முக்கியமான தகவல்களை பகிர்ந்து வருகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:
* 'Signature Not Verified' இணைய வழியில் பெறப்பட்ட வகுப்புச் சான்றிதழ்/தமிழ் வழி கல்வி பயின்றோர் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாமா?
* 'Signature Not Verified' பெறப்பட்ட சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தேர்வர்கள் முறையான மின் கையொப்பமிடப்பட்ட (Digital Signature) இணைய வழியில் பெறப்பட்ட வகுப்புச் சான்றிதழ் / தமிழ் வழி கல்வி பயின்றோர் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ் வழியில் பயின்றோர் சான்றிதழ்
* தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளியின் பெயர் மாற்றம் செய்யப் பெற்றிருப்பின் (உதாரணமாக தொடக்கப்பள்ளி என்பது நடுநிலைப்பள்ளி என்று) என்ன செய்ய வேண்டும்?
* தேர்வர்கள் பள்ளியின் பெயர் மாற்றம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து கடிதம் / சான்றிதழ் பெற்று, தமிழ் வழி கல்வி பயின்றோர் சான்றிதழ் உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளி சான்றிதழ்
* மாற்றுத்திறனாளி சான்றிதழை பழைய படிவம் IV-ல் கணினி வழி திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பதிவேற்றம் செய்தால் ஏற்றுக் கொள்ளப்படுமா?
* மாற்றுத்திறனாளி சான்றிதழை பழைய படிவம் IV-ல் கணினி வழி திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பதிவேற்றம் செய்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேர்வர்கள் மாற்றுத்திறனாளி சான்றிதழை அறிவிக்கையின் பிற்சேர்க்கை II-ல் உள்ள உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* தேர்வர்கள் ஒருமுறை பதிவு தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தபின் ஒப்புகை சீட்டில் கையொப்பமிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டுமா?
* தேர்வர்கள் ஒருமுறை பதிவு தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தபின் ஒப்புகை சீட்டை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.
* SC(A) வகுப்பைச் சேர்ந்த தேர்வர்கள் தங்களது இணைய வழியில் பெறப்படாத வகுப்புச் சான்றிதழில் SC என குறிப்பிடப்பட்டிருப்பின் அந்தச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுமா?
* SC(A) வகுப்பைச் சேர்ந்த தேர்வர்களது இணைய வழியில் பெறப்படாத வகுப்புச் சான்றிதழில் SC என குறிப்பிடப்பட்டிருப்பின் அந்தச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டாம்
ஒருமுறை பதிவு மற்றும் இணைய வழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை தேர்வர்கள் [email protected] அனுப்பலாம். இதர சந்தேகங்கள் மற்றும் [email protected] கோரிக்கைகளை அனுப்பலாம்.
தேர்வர்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகளை மின்னஞ்சல் மூலமாக அனுப்புமாறும், கைமுறையாக தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வர்கள் சான்றிதழ் அப்லோடு செய்வதற்கு முன்பாக இந்த விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உங்கள் உரிமைக் கோரல் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் மிகவும் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications