டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 3935 காலிப்பணியிடங்களாம்!
சென்னை: குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 3935 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இது சார் ஆட்சியர் முதல் விஏஓ, ஆபிஸ் அசிஸ்டென்ட் வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.
குரூப் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 உள்ளிட்ட குரூப்களில் தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 4 தேர்வில் ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத) பில் கலெக்டர் தட்டச்சு செய்பவர், ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3 கள ஆய்வாளர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குரூப் 4 தேர்வு
அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கைகள் இன்று வெளியாகியுள்ளன. மொத்தம் 3935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வு நாள் எப்போது
குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். இந்த தேர்வுக்கு www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி
தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒரு முறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்ததும் இந்த தேர்விற்கான விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கெனவே ஒரு முறை பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இந்த தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
தேர்வுக்கு அலைபேசி, பேஜர் உள்ளிட்ட மின்னணு கருவிகளையோ ஸ்மார்ட் வாட்ச், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்களையோ கொண்டு வருதல் கூடாது. அது போல் ப்ளூடூத் கருவி உள்ளிட்டவைகளையும் கொண்டு வருதல் குற்றமாகும்.
விண்ணப்பம் நிராகரிப்பு
தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது கருவிகள் வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர். தேவை என கருதப்படின் அந்த இடத்தில் சோதனைக்குள்படுத்தப்படுவர்.
உத்தரவாதம் கிடையாது
தேர்வுகள் அவர்களின் சொந்த நலன் கருதி கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களைத் தேர்வு கூடத்திற்கு எடுத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதுடன் அப்பொருட்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர இயலாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எத்தனை காலிப்பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 215 காலிப்பணியிடங்களும் இளநிலை உதவியாளர் பணிக்கு 1621 இடங்களும் இள நிலை உதவியாளர் பிணையம் பணிக்கு 46 இடங்களும் தட்டச்சர் பணிக்கு 1099 பணியிடங்களும் சுருக்கெழுத்தர் பணிக்கு 335 பணியிடங்களும் நேர்முக எழுத்தர் பணிக்கு 2 பணியிடங்களும் வனக் காப்பாளர் பணிக்கு 35 இடங்களும் வனக் காவலர் பணிக்கு 50 இடங்களும் என 3935 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தொகுதி
கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை உள்ளது. தேர்வர்கள் அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதலாம். எந்தெந்த மாவட்டங்களில் தேர்வு மையம் இருக்கிறது என்பதை அறிவிக்கையில் 29, 30 ஆகிய பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.
-
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications