டிஎன்பிஎஸ்சி தரும் மேஜர் குட்நியூஸ்..15000 காலி பணியிடங்கள்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்
சென்னை: தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வரும் டிசம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. டிஎன்பிஎஸ்சியின் 30 வகையான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 4 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விஏஓ, வருவாய் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள் என எல்லா துறைகளிலும் காலி பணியிடங்கள் இருக்கின்றன.

பொதுவாக காலி பணியிடங்கள் உருவானால் அதற்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் காலி பணியிடங்கள் குறைந்த அளவிலேயே நிரப்பப்படுவது பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. மிக அத்தியாவசிய பணியிடங்கள் மட்டுமே கணிசமாக நிரப்பப்படுகிறது. வரும் ஆண்டுகளில் 55,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இதன்படி ஆண்டு தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடம் இருந்து காலிபணியிட விவரங்கள் பெறப்படும், அதற்கேற்றபடி ஆண்டு அட்டவணை வெளியிட்டு, தேர்வுகள் நடத்தி ஆட்கள் பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள்.
அந்தவகையில் 2023-24-ம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறைசார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பாக முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர், மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து துறைசார்ந்த செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் , அனைத்து அரசு துறை செயலாளர்களும் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் விவரங்களை அனுப்பும் செயல் முறையை விரைவுபடுத்த வேண்டும். மேலும் 2023-24-ம் ஆண்டு வரையில் குரூப்-2, 2ஏ, 4 ஆகிய பணியிடங்களுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை மனிதவள மேலாண்மைத்துறைக்கும் வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வரும் டிசம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. டிஎன்பிஎஸ்சியின் 30 வகையான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு டிசம்பர் 14ம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு பணியிடங்களில் 10 ஆயிரம் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுகின்றனர். அதே எண்ணிகையில் காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றால்,க்கு 10,000 குரூப் 4 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம் ஆகும். ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398, 2022ம் ஆண்டு அறிவிக்கையன் படி 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவான குரூப் 4 பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் வரும் ஆண்டு கூடுதல் பணியாளர்கள் நிரப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications