டிஎன்பிஎஸ்சி நேர்காணலில் வரும் மெகா மாற்றம்! "இனி தவறுகள் நடக்க நோ சான்ஸ்.." இது சூப்பர் பிளான்
சென்னை: டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வில் குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளதாகச் சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறையைப் பின்பற்றவுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது அரசுப் பணியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவே நிரப்பப்படுகிறது. இதில் பெரும்பாலான தேர்வுகள் எழுத்துத் தேர்வு முறையிலேயே நடைபெறுகிறது.

அதேநேரம் க்ரூப் 1 உள்ளிட்ட சில பணியிடங்களுக்கு மட்டுமே எழுத்துத் தேர்வுடன் நேர்காணலும் நடைபெறுகிறது. இருப்பினும், நேர்காணலில் குளறுபடி நடக்க வாய்ப்புள்ளதாகவும் பாரபட்சமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
கோரிக்கை: தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டில் பல மாநிலங்களிலும் இதுபோன்ற புகார்கள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாகவே நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அனைத்து பணியிடங்களுக்கும் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு: இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு நேர்முகத் தேர்வு குறித்து முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இனி வரும் காலத்தில் நேர்முகத் தேர்வில் இந்த புதிய நடைமுறையைப் பின்பற்றவுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டிஎன்பிஎஸ்சி கொள்கைபடி அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும் பணிகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தத் தொடர் நடவடிக்கை மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இனி நேர்முகத் தேர்வுகளுக்கு (Oral Test) அழைக்கப்படும் நபர்களின் பெயர், போட்டோ, பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள் மறைக்கப்படும்.
புதிய முறை: அதற்குப் பதிலாக A, B, C, D என்பது போல ஆங்கில எழுத்துகள் அடிப்படையில் அவர்கள் நேர்காணல் ரூமிற்கு அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்களின் அடையாளம் மறைக்கப்படுவதன் மூலம் நேர்காணலின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வில் முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளதாகச் சமீப காலமாகப் பலரும் கூறி வரும் நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் இருந்து வந்த இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யும் நடைமுறையில் எந்தவொரு பாரபட்ச முடிவுகளும் இருக்காது என்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications