10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு! வெளியான அறிவிப்பு
வேலூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இதுதொடர்பான முழுவிபரம் வருமாறு:
மத்திய அரசின் என்ஏபிஎஸ்(NAPS) திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் பணிவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வேலூர் மண்டலத்தில் என்ஏபிஎஸ் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

டிஎன்எஸ்டிசி எனும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வேலூரில் காலியாக உள்ள 90 மெக்கானிக்(மோட்டார் வாகனம்) பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

இது அப்ரென்டீஸ் வகை பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உதவித்தொகையாக வழங்கப்படும். மொத்தம் 25 மாதம் பணி வழங்கப்படும். முதல் 6 மாதம் என்பது அடிப்படை பயிற்சி காலமாகவும், அடுத்த 19 மாதம் பணி பயிற்சி காலமாகவும் இருக்கும்.
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் NAPS இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் மற்றும் சான்று சரிபார்ப்பின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications