தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.. 8 மண்டலங்களில் பணி..விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை உள்பட 8 மண்டலங்களில் காலியாக உள்ள 346 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி 8 மண்டலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் மொத்தம் 346 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Diploma பிரிவில் 177, Graduate பிரிவில் 169 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மண்டலம் வாரியாக விழுப்புரத்தில் 96, கும்பகோணத்தில் 83, சேலத்தில் 29, மதுரையில் 26, திண்டுக்கல்லில் 23, தர்மபுரியில் 23, விருதுநகரில் 22, சென்னையில் 44 என மொத்தம் 346 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிகள் அனைத்தும் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் என்ஜினீயரிங் படிப்பு (Graduate) அல்லது டிப்ளமோ படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று முடித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022ல் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

சம்பளம் எவ்வளவு?
இது Apprentice வகை பணி என்பதால் Graduate Apprentice பணிக்கு மாதம் ரூ.9 ஆயிரமும், Diploma Apprentice பணிக்கு மாதம் ரூ.8 ஆயிரமும் Stipend ஆக வழங்கப்படும். வயது வரம்பை பொறுத்தமட்டில் Apprentice விதிகள் பின்பற்றப்பட உள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு ஓராண்டு வரை பயிற்சியுடன் கூடிய உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் மாதம் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
IT Jobs: சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மே 29ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
நீலகிரி வெலிங்டன்னில் வேலை.. குரூப் சி பிரிவில் 78 காலியிடங்கள்! 93 ஆயிரம் சம்பளம்












Click it and Unblock the Notifications