வந்தாச்சு.. வந்தாச்சு.. தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு.. 3 ஆயிரம் பணியிடங்கள்
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,359 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது வேலை தேடும் பல இளைஞர்களின் கனவாக உள்ளது. இளம் வயதில் இருந்தே இதற்கான உடல் தகுதியை பராமரித்துக் கொண்டு தீவிர பயிற்சியை பல இளைஞர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். காவல்துறையில் வேலை பார்க்க விரும்பும் இளைஞர்களின் கனவை நனவாக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதாவது, இரண்டாம் நிலைக் காவலர் , இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
காலி பணியிடங்கள்: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/ மாநகர ஆயுதப் படை) -780 பெண்கள்; இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) 1819 (ஆண்கள்) , சிறை மற்றும் சீர்திருத்த துறையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 83 ஆண்களும் 3 பெண்களும் என மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் பதவிக்கு 674 பேர் நியமிக்கப்படுகிரார்கள். மொத்தமாக 2,576 ஆண்கள், 783 பெண்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியிடஙக்ளில் 3,359 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
வயது வரம்பு: 1.07.2.2023 படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 26 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. (வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எனவே பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)
கல்வி தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?: இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான ஊதிய விகிதம்: ரூ.18,200- 67,100
விண்ணப்பிப்பது எப்படி?: இணையவழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி 18.08.2023, விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள்; 17.09.2023. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். செய்தித்தாள்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
IT Jobs: 7 பிரிவுகளில் காலியிடங்கள்.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. ஏப்ரல் 18-ல் இண்டர்வியூ -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்கள்.. 47 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு கம்பெனிங்க.. விட்றாதீங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications