தமிழகத்தில் 3,644 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. ஹால் டிக்கெட் வந்தாச்சு.. உடனே செக் பண்ணுங்க
சென்னை: தமிழக காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் மற்றும் சிறை, சீர்திருத்த துறையில் 180 காலிப்பயணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தற்போது ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. 2 ஆம் நிலை காவலர் பணியிடங்கள் 2,833 மற்றும் சிறை மற்றும் சீர்திருத்த துறையில் 180 காலிப்பணியிடங்களும் தீ அணைப்பு துறையில் 631 தீ அணைப்பாளர் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. காவலர் பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த தேர்வர்கள் இந்த காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
கல்வித் தகுதி
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் காவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். காவலர் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு ஆகும்.
வயது வரம்பு
18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,200 முதல் 67,100 வரை சம்பளமாக கிடைக்கும் என்பதாலும் எல்லாவற்றிற்கும் அரசு பணி, மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதால் தேர்வர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
ஹால் டிக்கெட் வெளியீடு
விண்ணப்ப அவகாசம் கடந்த மாதமே முடிந்த நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடுவதற்கான பணிகளில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் ஈடுபட்டு இருந்தது. வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் https://tnusrb.cr.2025.ucanapply.com/login என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து டவுன்லோடு செய்து கொள்ளளாலாம். ஹால் டிக்கெட்டில் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மையம் அமைந்துள்ள இடம், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கும்.
அரை மணி நேரம் முன்பாகவே
தேர்வர்கள் இந்த விதிகளை கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படும் நேரத்திற்கு சரியாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கடைசி நேரத்தில் போய் நின்று பதற்றத்துடன் செல்வதை தவிர்க்க அரை மணி நேரம் முன்பாகவே தேர்வு கூடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications
