2,222 காலியிடங்கள்.. ரூ.36,400 டூ ரூ.1.15 லட்சம் சம்பளத்தில் சூப்பர் வேலை! டிஆர்பி மேஜர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பட்டதாரி ஆசிரியர்/தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36,400 முதல் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 700 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் பள்ளி கல்வித்துறையின் கீழ் ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வருகிறது. இந்த தேர்வு வாரியம் டெட் தேர்வை நடத்துகிறது.

இதுதவிர இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை, சிறப்பு ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், வேளாண் பயிற்றுநர்கள், தொகுதி கல்வி அதிகாரிகள் என பல்வேறு பரிவு பணிக்கு தேர்வானவர்களை நியமனம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
காலியிடங்கள்: இந்நிலையில் தான் பட்டதாரி ஆசிரியர்கள்/தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்களை (Block Resource Teacher Educators or BRTE) நேரடி ஆட்சேர்ப்பு முறையில் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள்/தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் பணிக்கு 2222 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாடவாரியாக பார்த்தால் தமிழுக்கு 394 பேர், ஆங்கிலத்துக்கு 252 பேர் , கணிதத்துக்கு 233 பேர், இயற்பியலுக்கு 293 பேர், வேதியியலுக்கு 290 பேர், தாவரவியலுக்கு 131 பேர், விலங்கியலுக்கு 132 பேர், வரலாறுக்கு 391 பேர், Geographyக்கு 106 பேர் என மொத்தம் 2222 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பொதுப்பிரிவினராக இருந்தால் 53 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, பிசி முஸ்லிம், பிசி, எம்பிசி, டிஎன்சி உள்ளிட்டோராக இருந்தால் 58 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி-மாதசம்பளம்: இந்த பணிகளுக்கு DTED, இளங்கலை பட்டப்படிப்புடன் பிஎட், B.EI.Ed., BA/B.sc.Ed, B.A.ed./B.sc.Ed படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருப்பதோடு TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.36,400 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 700 வரை மாதசம்பளம் என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் மாதம் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் https://www.trb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் என்றால் ரூ.300 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்வது எப்படி: இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு ஓஎம்ஆர் ஷீட் தேர்வானது 2024 ஜனவரி மாதம் 7 ம் தேதி நடத்தப்படும். அதாவது தமிழ் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு பிறகு பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications