ஆசிரியராவது உங்கள் கனவா? 9494 காலிப்பணியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்.. அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் 9 ஆயிரத்து 494 ஆசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு ஆணையமான TRB வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஆர்பி அமைக்கப்பட்டுள்ளது.

TRB has issued notice to fill 9494 teacher vacancies in Tamil Nadu

காலிப்பணியிடங்களை பொறுத்து அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் உதவிப் பேராசிரியர்கள் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் இதனால் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் 9494 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டு வருடங்களாக கொரோனா பரவி வரும் நிலையில் பள்ளி கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இதேபோல அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப் படவில்லை. இந்நிலையில் தற்போது ஓரளவு பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில் தேர்வுகளை நடத்த டிஆர்பி திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 2ஆம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நவம்பர் 2ஆம் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என டிஆர்பி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் நிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்திலும், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு டிசம்பர் இரண்டாம் வாரத்திலும் நடைபெறும் என டிஆர்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+