563 உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎஸ்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு.. ரிசல்ட் வெளியீடு
ஐதராபாத்: கலெக்டர், துணை கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு தெலுங்கானா அரசு நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். அதன்பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. அதேபோல தெலுங்கானாவில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியை தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TSPSC) நிரப்புகிறது. குரூப் 1 பதவி என்பது மாநில அரசு பணிகளில் உயரிய பொறுப்புக்காக நடத்தப்படுவது ஆகும்.

சப் கலெக்டர், துணை கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட பஞ்சாயத்து அலுவலர், மாவட்ட பதிவாளர், சிறைச்சாலை துணை கண்காணிப்பாளர், தொழிலாளர் துணை ஆணையர், உதவி கலால் கண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர், மாவட்ட சமூக நல அலுவலர் / மாவட்ட பட்டியல் சாதி மேம்பாட்டு அலுவலர் உள்ளிட்ட உயர் நிர்வாக பணிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் தெலுங்கானாவில் 563 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான மெயின்ஸ் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 31,382 தேர்வர்கள் எழுதியிருந்தனர். மெயின்ஸ் தேர்வு என்பதால் விரிவாக்கம் எழுதும் வகையில் வினாக்கள் இடம் பெற்று இருக்கும். இந்த தேர்வுகள் இரு கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்று முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே இன்று டிஎஸ்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்ற விவரங்களும் வெளியாகியுள்ளன. tspsc.gov.in. என்ற அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்கள் தேர்வு பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை கொடுத்து ரிசல்ட்களை தெரிந்து கொள்ள முடியும். TGPSC ஐடி மற்றும் மெயின்ஸ் ஹால் டிக்கெட் எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
குரூப் 1 தேர்வு தமிழகத்தில் நடைபெறுவதை போல இரண்டு கட்ட எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. தற்போது மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள், எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து பைனல் மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications