பென்சன் வாங்குபவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தங்கத்தை வைத்து மத்திய அரசு போடும் பிளான்.. பணம் வருது!
சென்னை: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்) வரும் நிதியை இனி தங்கத்திலும் முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்) ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டி.ஏ) குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்குப் கூடுதல் முதலீட்டு வாய்ப்புகளும், புதிய வகையான ஓய்வூதியத் திட்டமிடலும் கிடைக்கும்.

அதன்படி என்.பி.எஸ். டயர் I மற்றும் டயர் II சந்தாதாரர்களுக்கான பங்கு தங்கம் உள்ளிட்ட புதிய சொத்துக்களில் முதலீடு செய்யப்படும்.
திருத்தப்பட்ட விதிகளின்படி பங்கு முதலீடுகள் முழுமையான நிஃப்டி 250, பி.எஸ்.இ 250 பங்குகள், பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் (5% வரை) மற்றும் ஐ.பி.ஓ/எஃப்.பி.ஓ-க்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் நம்பிக்கை முதலீடுகள் (REITs), பங்கு சார்ந்த மாற்று முதலீட்டு நிதிகள் (AIFs), தங்கம் மற்றும் வெள்ளி பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs) போன்ற கூடுதல் சந்தை சார்ந்த கருவிகளுக்கும் 5% மொத்த வரம்புடன் அனுமதி உண்டு.
தங்கத்தில் பென்சன் முதலீடு
அதாவது உங்கள் பென்சன் பணம் தங்கத்திலும் முதலீடு செய்யப்படும். ஆனால் இந்த தேசிய பென்சன் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதுவரை 10 சதவிகிதத்திற்கும் குறைவான மத்திய அரசு ஊழியர்களே இதில் இணைந்துள்ளனர்.
முன்னதாக, ஏப்ரல் 1, 2025 அன்று பணியில் இருந்த ஊழியர்கள், தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள், மற்றும் இறந்த ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் ஜூன் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் பெற்றனர். பின்னர், இந்தக் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.அதன்பின் நவம்பர் கடைசி வரை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
மத்திய அரசில் ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் தங்கள் படிவங்களை நேரடியாகவோ அல்லது பயிற்சி நிலையத் தலைவரிடமோ சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவங்கள் DDO-க்கு அனுப்பப்பட்டு, நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) உருவாக்கப்படும்.
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலிருந்து தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) ஒரே ஒரு முறை மட்டுமே மாற நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது விருப்ப ஓய்வுக்கு மூன்று மாதங்கள் முன்போ இந்த மாற்றத்தைச் செய்யலாம். ஒரு முறை ஓய்வூதிய முறையை மாற்றிய பிறகு, மீண்டும் அதை மாற்ற முடியாது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
பணி நீக்கம் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த வசதி பொருந்தாது. ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டால், ஊழியர்கள் யுபிஎஸ் திட்டத்தின் பலன்களுக்குத் தகுதியற்றவர்களாகிவிடுவார்கள். அரசு வழங்கும் 4% கூடுதல் பங்களிப்பு, வெளியேறும் நேரத்தில் ஊழியரின் NPS கணக்கில் சேர்க்கப்படும்.
மத்திய அரசு 2024-ல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்த இத்திட்டம், ஓய்வூதியப் பாதுகாப்பில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்பட்டது. NPS-க்கு மாற்றாக அமைக்கப்பட்ட UPS, அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாத ஓய்வூதியத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டம்
இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றின் முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், ஓய்வூதியம் கணக்கிடப்படும் முறை, ஊழியரின் பங்களிப்பு மற்றும் அதிக பென்சன் பெறுவதற்கான முழுமையான விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். யுபிஎஸ் திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற, 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். ஓய்வுபெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.
10 ஆண்டுகளுக்குக் குறைவான சேவை காலம் கொண்டவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட, ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவான சேவை காலம் கொண்டவர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். யுபிஎஸ் திட்டத்தின் கீழ், 10 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் போது மாதத்திற்கு ₹10,000 உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications