இப்போ கிள்ளி கொடுத்தாங்க.. அடுத்து அதுவும் இல்லை! அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வைக்கும் செக்?
சென்னை: 1.2 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) 2% ஆக உயர்த்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதாவது அகவிலைப்படியை 55% ஆக உயர்த்தி மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இந்த 2% டிஏ உயர்வு கடந்த 78 மாதங்களில் மிக மிக குறைவானது. ஆனால் இப்போது, 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கத்தில் மேலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. பணவீக்கத்தை வைத்தே அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படும். இதனால் மத்திய ஊழியர்கள் 2% க்கு குறைவாக அல்லது பூஜ்ஜிய DA உயர்வை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக DA மற்றும் DR இரண்டும் ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும், பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும். இந்த முறை முறை அகவிலைப்படி உயர்வு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி சுழற்சிக்கான அகவிலைப்படி. அடுத்து ஜூலை மாதம் அடுத்த கட்ட அகவிலைப்படி அறிவிக்கப்படும்.

பொதுவாக பணவீக்கத்தை சமாளிக்கவே அகவிலைப்படி உயர்த்தப்படும். இதற்காக பிட்மென்ட் காரணி பயன்படுத்தப்படும். இப்படிப்பட்ட நிலையில் தான் 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கத்தில் மேலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. பணவீக்கம் தொடர்ந்து 3%க்கு கீழ் குறைந்து கொண்டே இருப்பதால், மத்திய ஊழியர்கள் 2% க்கு குறைவாக அல்லது பூஜ்ஜிய DA உயர்வை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு எப்போது?
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி இந்நேரம் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அறிவிக்கப்படவில்லை . இந்த நிலையில் இந்த வார இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பொதுவாக மத்திய அரசு எவ்வளவு அகவிலைப்படி உயர்த்துகிறதோ அதே அளவிற்குத்தான் தமிழ்நாடு அரசும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டது.
இந்த முறை மத்திய அரசு சார்பாக 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. இதே அளவு அல்லது 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி டூ மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு மட்டும் அரியர் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1080 ரூபாய் வரி இவர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்.
இதை பின்பற்ற வேண்டாம் என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஏற்கனவே அரசு மீது அப்செட்டில் இருக்கின்றனர். கடந்த 2-3 தேர்தல்களாக அரசு ஊழியர்கள் ஆளும் திமுக பக்கமும் நிற்கவில்லை. அரசு ஊழியர்கள் சம்பளம் குறைவாக இருப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் அகவிலைப்படியில் வெறும் 2%ஐ உயர்த்தினால் அது அரசு ஊழியர்களை மேலும் அப்செட்டாக்கும். இதனால் அரசு ஊழியர்கள் மனம் குளிரும் விதமாக அவர்களின் சம்பளத்தை கூடுதலாக உயர்த்தும் வகையில் அகவிலைப்படி சதவிகிதம் கூடுதலாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications