இந்திய வனத்துறையில் அதிகாரி ஆகணுமா? டிகிரி முடித்து இருந்தால் போதும்.. யுபிஎஸ்சி கொடுத்த சூப்பர் சான்ஸ்
சென்னை: இந்திய வனத்துறை சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப் பிக்க கடைசிநாள் எப்போது? கல்வித்தகுதி என்ன என்பது தொடர்பான விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் (வனத்துறை) உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்தியாவில் உள்ள அரசு பதவிகளில் உயர்ந்த பதவியாக இவை இருப்பதால், நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியங்களில் ஒன்றாக இது உள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
இந்திய வனத்துறை தேர்வு: 80 பணியிடங்கள். கல்வித்தகுதியைப் பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து டிகிரி முடித்து இருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் அல்லது வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியலில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1 ஆகஸ்ட் 2026 அன்று குறைந்தது 21 வயதை எட்டியிருக்க வேண்டும் மற்றும் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்கள் 2 ஆகஸ்ட் 1994 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும், 1 ஆகஸ்ட் 2005 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு +5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு +3 ஆண்டுகள் வழங்கப்படும்.
தேர்வு முறை:
முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் நிலைத் தேர்வு: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
முதன்மைத் தேர்வு: சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பைப் படித்து உறுதி செய்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க வரும் 24.02.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பைப் படிக்க:
https://upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-26-Engl-040226.pdf
-
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications