979 சிவில் சர்வீசஸ் காலி பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி.. யுபிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
சென்னை: இந்தியாவின் அதிகாரம் மிக்க பதவிகள் என்றால் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., குரூப்-ஏ, குரூப்-பி ஆகிய பணிகள் தான். இதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத வேண்டும். இதில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவோருக்கு ஐஏஏஸ் கேடரும், அதற்கு அடுத்தடுத்து தகுதிகளின் அடிப்படையில் ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., குரூப்-ஏ, குரூப்-பி பதவிகள் கிடைக்கும். இந்த ஆண்டு 979 சிவில் சர்வீசஸ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியில் சேர விரும்பும் ஒவ்வொருவரின் கனவு என்றால் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரியாவது தான். ஐஏஎஸ் அதிகாரியானால் ஒரு மாவட்டத்தின் கலெக்டர் ஆக பணியாற்றலாம். ஐபிஎஸ் அதிகாரி என்றால், ஒரு மாவட்டத்தின் காவல்துறை நிர்வாகம் செய்ய முடியும். ஐஎப்எஸ் அதிகாரியானால் தூதரக அதிகாரியாக வெளிநாடுகளில் பணியாற்றலாம்.

இதேபோல் இந்திய வன அதிகாரி பணியிடம், குரூப்-ஏ, குரூப்-பி ஆகிய பணிகளில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயர்ந்த பதவிகளை பெற முடியும். இந்நிலையில் மேற்கண்ட சிவில் சர்வீசஸ் பதவிகளில் ஒவ்வொரு ஆண்டும் வரும் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடுவது வழக்கம்.
இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். மிகவும் சவாலான இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வுகளை எழுதுகிறார்கள். இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டு உள்ளது.
அதன்படி, சிவில் சர்வீசஸ் பதவிகளில் 979 காலி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 1056 பணியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தேர்வில் அதிலிருந்து 77 பணியிடங்கள் குறைவாக நிரப்பப்பட உள்ளது. இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட பல்வேறு பணிகள் , காலியிடங்களை பொறுத்து நிரப்பப்பட உள்ளது.
தகுதியானவர்கள், https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்றுவிண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி ஆகும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்களில் தகுதியான விண்ணப்பங்களை அனுப்பியவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 25-ந் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இதுதொடர்பான விவரங்களை https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். இதனிடையே சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு நடைபெறும் அதே நாளில் இந்திய வன சேவைக்கான (Indian Forest Service) தேர்வும் நடைபெற உள்ளது. 150 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications