மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு! 832 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? உடனே அப்ளை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களைத் தொடங்கும் வகையில், மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 24- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ், நலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியிலும், பிற இடங்களிலும் மொத்தம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140 மையங்கள் உள்பட 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.

Job Jobs Employment

ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் மாவட்ட சுகாதார சங்கங்களின் மூலம் பணியமர்த்தப்பட்டனர். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் இந்த மையங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் அளிக்கப்படுகின்றன. நோயாளிகள் டாக்டர்களை காணொலி மூலமாக தொடர்பு கொண்டும் சிகிச்சை பெற முடியும்.

பணியிடங்கள் விவரம்

தமிழக அரசு அறிவித்தபடி, எஞ்சிய 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளது. அங்கு பணிபுரிய மருத்துவர்கள், நர்சுகள் நியமனத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்.

சம்பளம் எவ்வளவு?

மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60 ஆயிரம், நர்சுகளுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வரும் 24- ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு ஏப்ரல் 1-ம் தேதி நடத்தப்பட்டு, 2-ம் தேதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப படிவங்களை ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட பண் ஆன்லைனில் டவுன்லோடு செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட பணியிடங்களுக்கு https://tiruppur.nic.in/notice_category/recruitment/ பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து மாவட்ட நலவாழ்வு சங்கம், திருப்பூர் அலுவலகத்தில் 24.03.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட காலிப் பணியிடங்கள் தோராயமானதாகும். மேலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+