எழுத படிக்க தெரிந்தால் போதும்.. உள்ளூரிலேயே வேலை.. 2,299 பணியிடங்களை நிரப்ப வருவாய்த்துறை உத்தரவு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத படிக்க தெரிந்து இருந்தாலே விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கும் மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 5,060 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் வருவாய்துறை செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்: இதன்படி, அரியலூர் - 21 (பணியிடங்கள்), சென்னை - 20, செங்கல்பட்டு 41, கடலூர் - 66, கிருஷ்ணகிரி - 33 மதுரை - 155, மயிலாடுதுறை - 13, நாகை - 60, பெரம்பலூர் - 21, புதுக்கோட்டை - 27, ராமநாதபுரம் - 29, ராணிப்பேட்டை 43, சேலம் -105, சிவகங்கை - 46, தஞ்சை 305, தேனி - 25, திருவண்ணாமலை - 103, திருநெல்வேலி - 45, திருப்பூர் - 102, திருவாரூர் - 139, திருவள்ளூர் - 151, திருச்சி - 104, தூத்துக்குடி - 77, தென்காசி - 18, திருப்பத்தூர் - 32. விருதுநகர் - 38, வேலூர் - 30 விழுப்புரம்- 31 என மொத்தம் 2,299 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தமிழில் எழுதபடிக்க தெரிந்து இருக்க வேண்டும். சம்பளம் மாதம் ரூ. 11,100 - 35,100 - வரை வழங்கப்படும். 10 வருடங்களுக்கு பிறகு கிராம நிர்வாக அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்படும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 32 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு, இண்டர்வியூ, சான்றிதழ் சரிபார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெற்றோரை இழந்தவர், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விரைவில் தேர்வு குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications