நோ எக்ஸாம்.. வாப்காஸில் அசத்தலான வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா? மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: மத்திய அரசின் நீர் மற்றும் மின்சாரம் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை எழுத்து தேர்வு இன்றி நேர்காணல் முறையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய ஜல்சக்தி (நீர்ப்பாசனத்துறை) அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நீர் மற்றும் மின்சாரம் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (Water and Power Consultancy Services Limited or WAPCOS) நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி சீனியர் குவாலிட்டி கன்ட்ரோல் என்ஜினியர் (Senior Quality Control Engineer) பணிக்கு 40 பேர், பீல்ட் குவாலிட்டி அசூரன்ஸ் மற்றும் கன்ட்ரோல் என்ஜினியர் (Field Quality Assurance & Control Engineer) பணிக்கு 100 பேர் என மொத்தம் 140 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: சீனியர் குவாலிட்டி கன்ட்ரோல் என்ஜினியர் பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பீல்ட் குவாலிட்டி அசூரன்ஸ் மற்றும் கன்ட்ரோல் என்ஜினியர் பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 31.08.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: சீனியர் குவாலிட்டி கன்ட்ரோல் என்ஜினியர் பணி மற்றும் பீல்ட் குவாலிட்டி அசூரன்ஸ் அன்ட் கன்ட்ரோல் என்ஜினியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்விரான்மென்டல் (Environmental) பிரிவுகளில் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 30.09.2023 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதாவது https://www.wapcos.co.in/ இணையதளம் சென்று Career என்பதை கிளிக் செய்து விண்ணப்ப பணி அறிவிப்பு அட்டவணையில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து [email protected] இ-மெயில் முகவரிக்கு 30.09.2023ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மாதசம்பளம்: இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் மற்றும் திறனறி தேர்வு (Skill Test) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் இந்த பணி என்பது Short Term அடிப்படையிலானது. Project-ஐ பொறுத்து பணி நீட்டிப்பு முடிவு என்பது வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளம் எவ்வளவு என்பது குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இல்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
சென்ட்ரல் வங்கியில் வேலைவாய்ப்பு.. மாதம் 1.20 லட்சம் சம்பளம்.. பி.இ முடித்தவரக்ளுக்கு வாய்ப்பு -
IT Jobs:சோழிங்கநல்லூரில் ஐடி வேலை.. சென்னை HCL அலுவலகத்தில் நாளை – நாளை மறுநாள் இண்டர்வியூ! -
எஸ்ஐ வேலை காவல்துறைக்கு இதயம் போன்றது.. இசக்கி ராஜா பேசிய பழைய வீடியோ -
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
2.7 கோடி சம்பளம்.. கூகுள் வேலையைத் துறந்த இந்தியப் பெண்.. துபாயில் மகன் கணவனுடன் செட்டிலானது ஏன் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!











Click it and Unblock the Notifications