8 பிரிவுகளில் காலியிடங்கள்.. கோவை ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் ஐடி வேலை.. ஆகஸ்ட் 14 வரை இண்டர்வியூ
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கோவையில் Webnox Technologies என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஐடி துறை சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெப்சைட் டெவலப்மென்ட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்டவற்றை பிரதானமாக செய்து வருகிறது.

இந்நிலையில் தான் Webnox Technologies நிறுவனத்தில் தற்போது 8 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பில் உள்ள விவரங்கள் வருமாறு:
* Sales/Business Analyst
* UI/UX Designer
* Digital marketer
* HR Intern
* Quality Analyst
* WordPress Dev
* Full Stack Dev
* Frontend Dev என மொத்தம் 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் குவாலிட்டி அனலிஸ்ட் பணிக்கு 6 மாதம் முதல் ஓராண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எச்ஆர் (இன்டர்ன்) பணிக்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்டர்ன் செய்வோர் திறமையாக இருக்கும் பட்சத்தில் நிறுவனத்தில் நியமனம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த பணியை பெற விரும்புவோர் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இதுதவிர மேற்கூறிய பிரிவில் பணியாற்ற வேண்டிய திறமைகளை கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்க இன்டர்ன்ஷிப் சர்ட்டிபிகேட், பெயிட் இன்டர்ன்ஷிப், ரெஃபரரல் கடிதம் உள்ளிட்டவை வழங்கப்படும்.
தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இன்று முதல் இண்டர்வியூ தொடங்கி நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை காந்திபுரத்தில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை 6374382502 என்ற எண்ணில் ரெஸ்யூம் அனுப்பி வாட்ஸ்அப் மூலமாக கேட்டு தெரிந்து கொண்டு இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications