IAS அதிகாரியை விட அதிக சம்பளம்! மதிப்புமிக்க பதவிக்கு போகலாம்! அப்படிப்பட்ட படிப்பு என்ன தெரியுமா?
சென்னை: ஐஏஎஸ் அதிகாரியை விட சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்புக்குத்தான் அதிக சம்பளம். செயற்கை நுண்ணறிவு வந்தாலும் வேலைவாய்ப்புகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என சிஏ தேர்வு மையத்தை நடத்தும் நபர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு சிஏவில் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். பொறியியல், என்ஜினியரிங்தான் படிப்பு என நினைத்தவர்களுக்கு சிஏ அதைவிட மரியாதைக்குரிய படிப்பு என்பதை விளக்குவதோடு பொறியியல், மருத்துவம் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே அவ்வளவுதான் என நினைக்காமல் ஏராளமான படிப்புகள் கொட்டி கிடக்கின்றனன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

இதுகுறித்து நியூஸ் 18 சேனலுக்கு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஜான் முரீஸ் கூறுகையில் இந்தியாவில் சிஏ தேர்வில் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதை நான் சமுதாய மாற்றம் என்றுதான் சொல்வேன். ஒரு காலத்தில் என்ஜினியரிங், மருத்துவம் கிடைக்காதவர்கள் மட்டுமே சிஏ படிப்பில் சேரும் நிலை ஏற்பட்டது.
ஆனால் தற்போது பி.காம் படிப்பதற்கு கூட போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஏ படிப்பு முடிப்பதற்கு ஆகும் செலவு 63 ஆயிரம் மட்டுமே! அது போல் எங்களை போன்ற ஆடிட்டர்களிடம் பயிற்சி பெறும் போது அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கான செலவை அந்த ஊக்கத்தொகையிலேயே அவர்கள் முடித்துக் கொள்ளலாம்.
Foundation, inter, final ஆகிய 3 தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இவற்றை படிக்க இன்ஸ்டியூட்களுக்கு ரூ 53 ஆயிரம்தான் செலவாகும். செலவு செய்த தொகையும் படிக்கும் போதே ஊக்கத்தொகையாக கிடைத்துவிடும். இந்தியாவில் 3,90,000 சிஏக்கள் இருக்கிறார்கள். பிரிட்டன் பாப்புலேஷனை மேட்ச் செய்ய 80 லட்சம் பேர் வரை வரலாம்.
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது கணக்கு எழுதுதல் ஆகும். கிராம பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்றால் கிராமத்திற்கு ஒரு சிஏ வர வேண்டும். 2047 ஆம் ஆண்டு அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 100 ஆவது ஆண்டில் 30 லட்சம் சிஏக்கள் வேண்டும் என்றால் இந்த ஆண்டே 6,48,000 சிஏக்கள் உருவாக வேண்டும்.
ஐஏஎஸ் அதிகாரி வாங்கும் ஊதியம் கிடைக்கும். இந்த படிப்புக்கு உழைப்பு முக்கியம். அடுத்தது, இந்த சிஏ பணிக்கு ஓய்வே கிடையாது. 60 வயதுக்கு மேல் கூட பணியாற்றலாம். தமிழ் வழி கல்வி கற்றவர்கள் கூட இந்த தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம். பிளஸ் 2 முடித்துவிட்டு வருவோர் foundation கோர்ஸ் படிக்க வேண்டும்.
இதே கல்லூரி முடித்தவர்கள் நேரடியாக inter போகலாம். பிளஸ் 2 படித்தவர்கள் 50 அல்லது 55 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அது போல் கல்லூரி முடித்திருந்தாலும் 50 அல்லது 55 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்பெல்லாம் சிஏ தேர்வு அதாவது foundation, inter க்கு ஆண்டுக்கு இரு முறை நடந்தது. தற்போது 3 முறை நடக்கிறது. இது பெரிய நன்மை.
ஆனால் பைனல் தேர்வு என்பது ஆண்டுக்கு இருமுறைதான். முன்பு 4 பேப்பர் என இருந்ததை தற்போது 3 பேப்பராக்கிவிட்டார்கள். அர்ப்பணிப்புடன் படித்தால் 5 ஆண்டுகளில் சிஏ முடித்துவிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications