வருகிறது 8வது ஊதியக்குழு.. 44% சதவிகிதம் உயருகிறது சம்பளம்.. ஊழியர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்
சென்னை: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனவரி 1, 2024க்குள் 8வது ஊதியக் குழுவை அமைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு முன்.. இன்னும் சில நாட்களில் இந்த ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக்குழு அமலாக்கத்தால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் உயரும். இது குறித்து அதிகாரிகளிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக, புதிய ஊதியக் குழு பரிந்துரைகளை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு அமல்படுத்தும். 7வது ஊதியக்குழு ஜனவரி 1, 2016 முதல் அமலில் இருந்து வருகிறது.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாவது ஊதியக் குழுவை மோடி அரசு அறிவிக்கும் என்று அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா கணித்துள்ளார்.
எவ்வளவு உயரும்?: 7வது ஊதியக் குழுவின் சம்பளத் திருத்தம் செய்த போதே ஊழியர் சங்கங்கள் 3.68 ஃபிட்மென்ட் காரணியைக் கோரியிருந்தன, ஆனால் அரசாங்கம் 2.57 ஃபிட்மென்ட் காரணியை முடிவு செய்தது.
6வது ஊதியக் குழுவில் 7,000 ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது. அந்த 7 ஆயிரம் ரூபாயுடன் ஒப்பிடுகையில், 7வது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் 18,000 ரூபாயாக மாறியது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.3,500ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச சம்பளம் ₹2,50,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ₹1,25,000 ஆகவும் ஆனது.
இப்போது, 8வது ஊதியக் குழுவிற்கு 1.92 ஃபிட்மென்ட் காரணி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சம்பளம் 44% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.
பரிந்துரை: 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து உள்ளது..
7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.
ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு தற்போது வலுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில்.. சம்பளம் 44% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது கமிஷன் இருந்தால் அடுத்த வருடம் முதல் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications