Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியலை ஐகோர்ட் ரத்து செய்தது ஏன்? கொண்டாட வேண்டிய தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட சிவில் நீதிபதிகள் தேர்ச்சி பட்டியலை உயர்நீதிமன்றம் திடீரென ரத்து செய்திருப்பது குறித்து பரவும் தகவல்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபற்றி சமூக வலைதளங்களில் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். உண்மையில் டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவால் ஏழை மக்கள் பெரிய அளவில் பயன்பெற போகிறார்கள்.

சரி விஷயத்திற்குள் போவோம்.. தமிழ்நாட்டில கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி காலிப் பணியிடங்கள், 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கு முன்பு வரை இத்தேர்வை சென்னை உயர்நீதிமன்றம் நடத்தி வந்தது. எனினும் டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு பணிகளில் உயர் நீதிமன்றமே பங்கு வகித்து வருகிறது..

Why did the High Court quash the civil judge pass list published by TNPSC?

இந்நிலையில் 245 சிவில் நீதிபதி பதவிகான 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த தேர்வை எழுத பல ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு, தமிழகம் முழுவதும் 32 மையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வெளியானது.இதில் 2,544 பேர் அடுத்த கட்ட முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றார்கள். இதையடுத்து, சென்னையில் உள்ள 25 மையங்களில் முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி நடந்தது.. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வும் நடந்தது.

நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் சிவில் நீதிபதிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தற்காலிக தேர்வு பட்டியலை கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பட்டியலில் ஏராளமான ஏழை பெண்கள், மாணவர்கள் நீதிபதிகளாக தேர்ச்சி பெற்றிருந்தனர். பழங்குடியின பெண் முதல், குடிசை வீட்டில் வாழும் ஏழைக் கூலித்தொழிலாளியின் மகள் வரை பலரும் நீதிபதிகளாக தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்றவர்களின் தற்காலிக பட்டியலில், காலி பின்னடைவு பணியிடங்கள், மற்றும் தற்போதைய புதிய பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், 'அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை பொதுப்பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமனறத்தின் உத்தரவை மீறி, சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வுப்பட்டியலில் இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அந்த பட்டியலை உயர்நீதிமன்றம் ரத்து செய்கிறது.

அதிக மதிப்பெண் பெற்றுள்ள தேர்வாளர்களை பொதுப்பிரிவில் சேர்த்தும், எஞ்சிய தேர்வாளர்களை உரிய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியும், புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் இரு வாரங்களில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

இதனிடையே இந்த தீர்ப்பினை தவறாக புரிந்து கொண்ட சிலர், சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகிறார்கள்.. இந்த தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. சிலர் தீர்ப்பை தவறாக சித்தரித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஏராளமான பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர்கள் நீதிபதிகள் ஆகப்போகிறார்கள் எப்படி என்பதை பார்ப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி நிலையம் நடத்தும் சிலரிடம் பேசிய போது அவர் கூறுகையில், பொதுவாக இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பெண்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுகிறார்கள்.. ஏராளமான பெண்கள் போட்டி போட்டு படித்து அவர்கள் பொதுப்பட்டியலிலேயே முழுமையாக அவர்களே வந்துவிடுகிறார்கள். பொதுப்பட்டியல் என்பது அனைவரும் உள்ளடக்கியது.. இதற்கான ஒதுக்கீடு என்பது எந்த சாதி, மதம், அரசு ஒதுக்கீடு என எதுவும் வராது.. எல்லாருக்குமே பொதுவானது. இந்த பொதுவான பட்டியலில் முழுமையாக பெண்களே பிடித்துக் கொள்கிறார்கள்.. அதன்பிறகு சாதி வாரியாக இடஒதுக்கீட்டிலும் சரி, பெண்களுக்கான இடஒதுக்கீடு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றார். அதாவது தேர்ச்சி பெறுவோரில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்று கூறினார்.

எனவே பெண்கள் எப்படி எல்லா பட்டியலிலும் வருகிறார்களோ, அதேபோன்று பொதுப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்பட வேண்டும்..அப்படி சேர்க்கப்பட்ட பின்னரே மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மற்றும் தமிழ் வழி என மற்ற ஒதுக்கீடு பக்கம் டிஎன்பிஎஸ்சி வர வேண்டும்.. அப்படி வந்திருந்தால் தங்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் தான, உயர்நீதிமன்றம் அதிரடியாக பட்டியலை ரத்து செய்துள்ளது. புதிய பட்டியலை 2 வாரத்தில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டால் ஏராளமான மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர்கள் நீதிபதியாகும் வாய்ப்பு உருவாகும்.. எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் வரவேற்க வேண்டிய சிறந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+