ஒயிட் காலர் ஊழியர்களுக்கு மட்டும் சிக்கல்.. கொத்தாக பறிபோகும் வேலை! தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
சென்னை: இப்போது உலகின் பல முன்னணி நிறுவனங்களில் கூட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஆயிரம் பேர் வேலையிழந்து வருகிறார்கள். இப்படித் திடீரெனப் பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
உலகின் பெரிய நிறுவனங்கள் கூட இப்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சமீபத்தில் அமேசான் கூட 14,000 ஆட்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. அமெரிக்காவின் யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனம் கடந்த 22 மாதங்களில் 14,000 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. அதேபோல், டார்கெட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் தங்களது கார்ப்பரேட் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன.

ஒயிட் காலர் வேலைகள்
அதாவது ஒயிட் காலர் வேலைகள் கடுமையாகச் சரிந்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் நடுத்தர மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளன.
பொருளாதாரச் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நிறுவனங்களுக்கும் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் கணக்கியல், மோசடி கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் ஹெச்ஆர் உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.. முன்பு அதிகச் சம்பளம் பெறும் நிபுணர்களால் கையாளப்பட்ட சில பணிகள் இப்போது ஏஐ வசம் மாற்றப்படுகின்றன.
கடும் பாதிப்பு
மேலும் நவீனத் தொழில்நுட்பம் குறித்துத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இப்போது வேலைவாய்ப்புகள் உள்ளன. இது வேலைவாய்ப்பு சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தால் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அனுபவம் வாய்ந்தவர்கள் கூட சிரமப்படுகிறார்கள்.
அதேநேரம் எல்லாத் துறைகளிலும் இதே நிலைமை என சொல்ல முடியாது.. வர்த்தகம், சுகாதாரம், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் தேவை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒயிட் காலர் வேலைகள் குறைகிறது.. உடல் ரீதியான வேலை தேவைப்படும் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறது.
சிக்கல்
இது தொடர்பாகச் சமீபத்தில் வேலையிழந்த ஐடி ஊழியர் ஒருவர் கூறுகையில், "ஐடி துறையில் நான் தகுதியானவன்.. ஆனால் எனக்கு அந்த வேலைகள் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் டெலிவரி செய்யும் வேலைகளைச் செய்து வருகிறேன்" என்றார்.
இப்போது ஒயிட் காலர் பணியாளர்கள் மூன்று பக்கத்தில் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். ஒரு பக்கம் ஆடோமேஷன், இன்னொரு பக்கம் புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுக்க மறுப்பது, மற்றொரு பக்கம் அதிக போட்டி! இப்படி மூன்று பக்கங்களில் இருந்தும் அழுத்தம் அதிகரிக்கிறது. முன்பு நிம்மதியாக ஒரு கார்ப்பரேட் வேலைகளில் இருந்த ஊழியர்களும் கூட இப்போது பிரஷரை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்
வேலையிழந்த ஊழியர்கள் தங்களை அடுத்த கட்டத்திற்கு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.. செயற்கை நுண்ணறிவு, டேட்டா, ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் திறன்களை மேம்படுத்துவது அவசியம். அப்போது தான் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். நெட்வோர்கிங், வேலைக்காக வெளியூர்களுக்கு செல்ல தாயாராக இருப்பது ஆகியவையும் முக்கியமானது.
இப்போது வேலைவாய்ப்பு சந்தையில் குழப்பம் நிலவி வருவதால் 6 முதல் 12 மாதங்களுக்குத் தேவைப்படும் ஒரு எமர்ஜென்சி நிதியை உருவாக்கி வைக்க வேண்டும். மேலும், அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைப்பது, ஆபத்தான முதலீடுகளை நிறுத்துவது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்கிறார்கள்.
-
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications