ஐடி துறையே கிடுகிடுத்து போச்சே.. அப்போ இந்த வருஷம் என்னதான் நடக்குமோ? பதற்றத்தில் ஊழியர்கள்!
சென்னை: 2025-26 நிதி ஆண்டில் ஐடி துறையில் பெரிய அளவில் பணியிட சேர்க்கைகள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஐடி துறையில் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்புகள் இல்லை.
பொதுவாக ஐடி துறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒவ்வொரு வருடமும் பணியிடங்கள் நிரப்பப்படும். அதாவது bulk எண்ணிக்கையில் இத்தனை பேர் என்று பலரை பணியில் எடுப்பார்கள். ஆனால் இந்த வருடம் அப்படி எடுக்க போவது இல்லை.
இந்த வருடம் முழுக்க bulk எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்பப்படாதது. வேண்டுமென்றால் அவசரத்திற்கு தேவையான ஊழியர்கள் ஒன்று - இரண்டு என்ற அளவில் பணிக்கு எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதை தவிர வேறு யாரும் எடுக்கப்பட வாய்ப்புகள் இல்லை. அமெரிக்க அதிபர் தொடங்கி உள்ள வர்த்தக போர் தொடங்கி பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. ஏஐ எழுச்சி, டிரம்ப் வர்த்தக போர், அவுட் சோர்சிங் உள்ளிட்ட புதிய விதிகள் காரணமாக இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும். அதாவது அமெரிக்க குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் IT நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும். கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக இந்தியர்கள் ஆன்சைட் போக முடியாத நிலை ஏற்படும்.
இது போக ஏஐ வருகை காரணமாக ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை வாய்ப்புகள், முக்கியமாக ஜூனியர் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த வருடம் முழுக்க bulk எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்பப்படாதது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஐடி துறையில் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்புகள் இல்லை.

பணியிடங்கள் தொடர்பான விவரங்கள்
டிசிஎஸ்
பணியமர்த்தல்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) FY26 இல் ஆயிரக்கணக்கான புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் செய்யப்பட்ட பணியமர்த்தலுக்கு இணையாக, இந்த நிதியாண்டில் 42,000 புதியவர்களை பணியமர்த்துவதாக அந்த நிறுவனம் கூறி உள்ளது. .
சம்பள உயர்வு
டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு சம்பள உயர்வை ஒத்திவைத்து உள்ளது. ஏப்ரல் மாதம் அதிகரிக்க வேண்டியது சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் பணிநீக்கங்கள்
மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ் 13.3 சதவீத attrition விகிதத்தை கொண்டு உள்ளது. டிசிஎஸ் ஐடி நிறுவனம் கடந்த ஆண்டு 6,433 பணியாளர்களை எடுத்தது. 24ஆம் நிதியாண்டின் 4ஆம் காலாண்டில் 6,01,546 ஆக இருந்த மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 6,07,979 ஆக உள்ளது. டிசம்பர் 2024 காலாண்டில் 6,07,354 ஆக இருந்த தொழிலாளர் எண்ணிக்கையில் மேலும் 625 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனத்தின் பணிநீக்கங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள பல இந்திய ஊழியர்கள் நிறுவனம் சார்பாக பணி நீக்கம் செய்ப்படலாம்.
இன்ஃபோசிஸ்
பணியமர்த்தல்
2026 நிதியாண்டில் 20,000 க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த ஐடி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் சிஎஃப்ஓ ஜெயேஷ் சங்க்ராஜ்கா அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 6,388 ஊழியர்களை பணியமர்த்தியது, அதன் மொத்த பணியாளர்களை 323,578 ஆக இது உயர்த்தியது. இது முந்தைய நிதியாண்டில் இருந்த 317,240 ஊழியர்களை விட சற்று அதிகமாகும்.
சம்பள உயர்வு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும் இது. இதன் சம்பள உயர்வுகளில் பெரும்பகுதி ஜனவரியிலேயே வெளியிடப்பட்டது, மீதமுள்ளவை ஏப்ரல் 1 முதல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்ஃபோசிஸில் உள்ள பெரும்பாலான ஊழியர்களின் சம்பள உயர்வு சராசரியாக 5-8 சதவீதம் வரை இருக்கும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டை விட குறைவாக உள்ளது.
இதற்கிடையில், சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் 10-12 சதவீத சம்பள உயர்வு பெற்றுள்ளனர். இன்ஃபோசிஸ் ஊழியர்களின் செயல்திறனை நான்கு வகைகளாகப் பிரிக்கிறது - சிறப்பானது, பாராட்டத்தக்கது, எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது மற்றும் முன்னேற்றம் தேவை.
பணிநீக்கங்கள்
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் 400க்கும் மேற்பட்ட ட்ரெயினிகளை மைசூரு வளாகத்தில் பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது இவர்கள் 3 டெஸ்டுகளில் தோல்வி அடைந்ததால் பயிற்சியில் இருந்து நீக்கி வேலையை விட்டு நீக்கி உள்ளது. கடந்த இரண்டரை வருடமாக இவர்கள் ட்ரெயினி என்ற பொறுப்பின் கீழ் இங்கே வேலை பார்த்து வந்துள்ளனர்.
விப்ரோ
பணியமர்த்தல்
விப்ரோ மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில் வெறும் 612 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளது. FY26 பணியமர்த்தல் இலக்கை விப்ரோ குறிப்பிடவில்லை.
பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் பணிநீக்கங்கள்
FY25க்கான விப்ரோவின் நிகர பணியாளர்கள் எண்ணிக்கை 1,032 உயர்ந்தது. இதனால் பணியாளர்களின் எண்ணிக்கை 2,33,346 ஆக உயர்ந்துள்ளது. பணிநீக்கங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை
சம்பள உயர்வு
விப்ரோ நிறுவனம் சம்பள உயர்வு குறித்து எந்த ஒரு பெரிய அப்டேட்டையும் கொடுக்கவில்லை. ஹேக் தேதிக்கு நெருக்கமாக நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.
HCL டெக்னாலஜிஸ்
பணியமர்த்தல்
மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் 2,665 ஊழியர்களைச் சேர்த்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட (4,061 பணியாளர்கள்) குறைவு ஆகும். இந்த நிறுவனம் FY 25 இல் 7,829 புதியவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
பணியாளர்கள் எண்ணிக்கை, பணிநீக்கம் மற்றும் சம்பள உயர்வு
மார்ச் காலாண்டில் மொத்த எண்ணிக்கை 2,23,420 ஆக இருந்தது. ஊழியர்களின் எண்ணிக்கை 7,398 ஆக குறைந்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. பணிநீக்கம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இதனால் இந்த வருடம் ஐடி துறையில் மிகப்பெரிய அளவில் சரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications