அனுபவம் வேண்டாம்.. ஏதாவது ஒரு டிகிரி போதும்.. சென்னையில் முன்னணி ஐடி நிறுவனம் தரும் பணி
சென்னை: டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களுக்கு சென்னையில் செயல்பட்டு வரும் விப்ரோ ஐடி நிறுவனம் சூப்பரான வேலையை தருகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான சம்பளம் உள்பட மற்ற விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) விளங்கி வருகிறது. இந்த ஐடி நிறுவனம் நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் விப்ரோ நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள விப்ரோ ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
விப்ரோ நிறுவனத்தில் தற்போது Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Freshersக்கான பணியாகும். இதனால் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இரவு பணி மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு கைகளில் மாதம் 13,500 சம்பளமாக கிடைக்கும். அதேபோல் பிஃஎப், மெடிக்கல் இன்சூரன்ஸ் லைப் இன்சூரன்ஸ், மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரம் 5 நாள் மட்டுமே வேலை இருக்கும். 2 நாட்கள் வார விடுமுறை என்பது கிடைக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள விப்ரோ அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஒருவேளை தாமதிக்கும் பட்சத்தில் அதற்கு விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் முடிந்து விடலாம். அதோடு பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியாமல் போகலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications