Wipro வேலைவாய்ப்பு.. டிப்ளமோ முடித்தோருக்கு வந்தாச்சு அறிவிப்பு.. ஜூலை 15 கடைசி நாள்
சென்னை: பிரபலமான விப்ரோ ஐடி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 15ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் முக்கியமான ஐடி நிறுவனமாக விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

தற்போது விப்ரோவில் School of IT infrastructure Management என்ற அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்து 2024, 2025ம் ஆண்டில் டிப்ளமோ படிப்பை 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்ணுடன் முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
டிப்ளமோவில் பாடவாரியாக பார்த்தால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இவர்கள் கண்டிப்பாக கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பிசினஸ் கணிதம், அப்ளைட் கணிதம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. விண்ணப்பம் செய்வோர் தொலைத்தூர கல்வி மூலம் 10, 12ம் வகுப்பு படித்திருக்கலாம் ஆனால் டிப்ளமோவை பார்ட் ஃடைம், தொலைத்தூர கல்வி மூலம் முடித்திருக்க கூடாது. கண்டிப்பாக கல்லூரி சென்று டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.
விண்ணப்பம் செய்வோருக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Stipend முறையில் சம்பளம் வழங்கப்படும். முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,400 வழங்கப்படும். அதன்பிறகு 2ம் ஆண்டு ரூ.15,488, 3ம் ஆண்டில் ரூ.17,553, 4வது ஆண்டில் ரூ19,918 வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பிடெக் படிப்பை படிக்க விப்ரோவில் இருந்து ஸ்பான்ஷர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. படிப்புக்கான செலவு முழுவதும் விப்ரோ நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். விப்ரோவில் பணியாற்றி கொண்டே பிடெக் படிப்பை இலவசமாக முடிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும். அன்று இரவு 11.59 மணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு 4 ரவுண்ட்டுகளாக இண்டர்வியூ என்பது நடக்கும். முதலில் ஆன்லைன் அசஸ்மென்ட் என்ற வகையில் தலா 20 நிமிடங்கள் என்று மொத்தம் 80 நிமிடங்கள் வரை முதல் ரவுண்ட் நடக்கும். இதில் Verbal, 2வது Analytical, 3வது Quantitative, 4வது Written Communication ஆகியவை இருக்கும். அடுத்ததாக 2வது ரவுண்ட்டில் Bussiness Discussion, 3வது ரவுண்ட்டில் எச்ஆர் டிஸ்கஷன், 4வது ரவுண்ட்டில் Free Skill Agreement இருக்கும்.
இது PAN India பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடைசி 3 மாதத்தில் விப்ரோவில் இண்டர்வியூவில் பங்கேற்றவர்களுக்கு இதில் அனுமதி கிடையாது மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பணிக்கு சர்வீஸ் அக்ரிமென்ட் உள்ளது. சர்வீஸ் அக்ரிமென்ட்டாக 48 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 4 ஆண்டுகள் விப்ரோவில் கட்டாயம் பணி செய்ய வேண்டும். அதற்கு முன்பு பணியை விடும் பட்சத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications