IT ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! விப்ரோ, இன்போசிஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி! இந்த வருஷம் சூப்பர்!
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) வந்ததால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழந்தனர். அவ்வளவுதான் ஐடி துறை மொத்தமாக முடியப்போகுது என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், தற்போது விப்ரோ, இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
கடந்த 2024-2025 காலகட்டம் ஐடி ஊழியர்களுக்கு போதாத காலம் என்றே சொல்லலாம். ஏஐ காரணமாக ஏராளமானோர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். வழக்கமாக ஐடி துறையில் வேலை இழப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்த முறை அது கொஞ்சம் கொடூரமாகவே இருந்தது.

ட்விஸ்ட் வைத்த நிறுவனங்கள்
2024-2025 காலகட்டத்தில் மொத்தம் 60,000-80,000 ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டனர். இதில் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் வேலை இழப்புகள் 20-30% வரை இருந்தன. இதனால் ஐடி துறையின் கதை முடியப்போகிறது என்று பலரும் நினைக்க தொடங்கினர். மனிதர்கள் செய்யும் வேலையை மெஷின்கள் செய்கிறது எனில், எதற்காக மனிதர்கள் என்று கேள்வி எழுந்தது. ஆனால், இங்குதான் ட்விஸ்ட் நடந்தது.
இன்ப அதிர்ச்சி
மெஷின்களை வைத்து, அதாவது ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து மேலும் தனது உற்பத்தியை அதிகரிக்க ஏஐ+மனித வளத்தை நிறுவனங்கள் பயன்படுத்த தொடங்கின. தற்போது லே ஆஃப் படலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் விப்ரோ, இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
சம்பள உயர்வு
அதாவது நீண்ட தாமதத்திற்கு பிறகு துனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை மார்ச் 1 முதல் அமல்படுத்துவதாக விப்ரோ அறிவித்திருக்கிறது. பொருளாதார மந்த நிலை, இதர செலவினம் போன்ற காரணங்களால் சம்பள உயர்வு தள்ளிப்போய் இருக்கிறது. இப்படி இருக்கையில் இப்போது சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகியிருப்பது ஐடி ஊழியர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் எத்தனை சதவிகிதம் சம்பள உயர்வு என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இன்போசிஸும் போனஸ் அறிவிப்பு
விப்ரோவை தொடர்ந்து இன்போசிஸும் சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது. போனஸை 85% அறிவித்திருக்கிறது. கடந்த 3.5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட போனஸை விட, இது மிக அதிகம். இதில் தகுதி உள்ள ஜூனியர் ஊழியர்களுக்கு 100% வரை போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாத சம்பளத்துடன் இந்த போனஸ் கணக்கில் சேரும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications