சேரும் போதே ரூ.75,000 போனஸ் + மாத சம்பளம்.. Wipro தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. நாளை கடைசி நாள்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான விப்ரோவில் வெளியான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பம் செய்வதற்கான தேதி என்பது நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளம், போனஸ் வழங்கப்படுவதுடன் வேலை செய்து கொண்டே அந்த நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பில் இலவசமாக எம்டெக் படிக்க முடியும்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies)ஒன்று. இந்த நிறுவனம் பெங்களூரில் இயங்கிவ ருகிறது. இந்நிலையில் தான் விப்ரோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி விப்ரோ நிறுவனத்தில் Wipro Work INtergrated Learning Program (WILP) முறையில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், எக்ட்ரானிக்ஸ் மற்றும் இயற்பியல் படிப்பை 2023, 2024ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் டிகிரி படிப்பில் 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA வைத்திருக்க வேண்டும்.
TCS வேவைாய்ப்பு.. சென்னையில் செப்டம்பர் 14ம் தேதி இண்டர்வியூ.. யாரெல்லாம் பங்கேற்கலாம்?
மேலும் டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும். இருப்பினும் Business Maths & Applied Matheatics பாடங்கள் இதில் வராது. மேலும் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் விப்ரோ நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பில் எம்டெக் படிப்பை படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.15,488 சம்பளமாக வழங்கப்படும். அதன்பிறகு 2வது ஆண்டு 17,553, மூன்றாவது ஆண்டு 19618, 4வது ஆண்டு ரூ.23 ஆயிரம் வரை சம்பளம் (Stipend) வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதலாக போனஸ் வழங்கப்பட உள்ளது. அதன்படி Joining Bonus ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் ஐடி வேலை.. டிகிரி மட்டுமே போதும்.. அழைக்கும் Accenture நிறுவனம்.. சூப்பர் சான்ஸ்
ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்வோர் இதனை கட்டாயம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
இந்த பணிக்கு செப்டம்பர் மாதம் 15ம் தேதி (நாளை) நள்ளிரவு 11.59 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications