பணியில் சேரும்போதே ரூ.75,000 போனஸ்.. BCA - B.sc படித்தோருக்கு வேலை ரெடி.. அழைக்கும் WIPRO
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சார்பில் பிஎஸ்சி, பிசிஏ படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசம்பர் 15ம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாளாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சேரும்போதே ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளதோடு தனியே சம்பளமும் மாதம் மாதம் வழங்கப்பட உள்ளது. இதனால் தகுதியானவர்கள் உடனடியான விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies). இந்த நிறுவனத்தில் Wipro's Work Integrated Learning Program (WILP) 2026 FY 26 என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்களுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து 2025ம் ஆண்டில் கல்லூரியில் பிசிஏ அல்லது பிஎஸ்சி டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPAஉடன் முடித்திருக்க வேண்டும். இதில் பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், புள்ளியில், எலக்ட்ரானிக்ஸ் இயற்பியல் பாடப்பிரிவுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும். Business Maths & Applied Matheatics பாடங்கள் இதில் வராது. மேலும் 10, பிளஸ் 2 மட்டும் தொலைதூர கல்வியில் படித்திருந்தாலும்விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பத்தாரர்கள் பள்ளி படிப்பில் இடைவெளி என்பது இருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி என்பது இருக்க கூடாது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஜாயினிங் போனஸாக (Joining Bonus) ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் ஆண்டு Stipend ஆக மாதந்தோறும் ரூ.15,488 வழங்கப்படும். 2வது ஆண்டு மாதந்தோறும் ரூ.17,553, மூன்றாவது ஆண்டு மாதந்தோறும் ரூ.19,618, 4வது ஆண்டு மாதந்தோறும் ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும். அதோடு, பிரபலமான கல்வி நிறுவனத்தில் எம்டெக் படிப்பை படிக்க வாய்ப்பு என்பது வழங்கப்படும். அதற்கான செலவை நிறுவனமே ஏற்கும்.
கடைசி 3 மாதத்தில் விப்ரோவில் இண்டர்வியூ சென்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும். இது ஒரு PAN India பணியாகும். இதனால்நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய டிசம்பர் 15ம் தேதி தான் கடைசி நாளாகும். இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications