‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. ஆபிஸ் போக வேண்டாம்.. அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்.. தேதி முடியப்போகுது
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில் சாப்ட்வேர் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான தேதி விரைவில் முடிவடைய உள்ளதால் விரைந்து தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பம் செய்வது அவசியமாகும்.
தற்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் பணி செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்டவை தவிர வேறு படிப்பை முடித்தவர்களும் கூட தனியே ஐடி வேலைக்கு தேவையான கோர்ஸை தனியே படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்களில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் ‛யே குளோபல்' (Yeah Global) சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Yeah Global சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தற்போது இந்தியாவில் சாப்ட்வேர் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி என்பது 1000 சதவீதம் Remote முறையை கொண்டதாகும். அதாவது வீட்டில் இருந்து தான் பணியாற்ற வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இளங்கலை படிப்பு அல்லது அதற்கு நிகரான தொழில்நுட்ப படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு ப்ரோகிராம் லேங்குவேஜ்களான சி, சி++, சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரரிப்ட் அல்லது பைத்தான் உள்ளிட்டவற்றை கற்று பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிக் டேட்டா மற்றம் ஸ்ட்ரீமிங் பிளாட்பார்ம்ஸ்களான Storm, Hadoop, Cosmos உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் தற்போது வரை விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது தெரிவிக்கப்படவி்ல்லை.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும். ஏனென்றால் விண்ணப்ப காலக்கெடு எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Yeah Global இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications