மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. சென்னை, திருச்சியில் பணியிடங்கள்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 3,979 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை மற்றும் திருச்சியில் பணியமர்த்தப்படுவார்கள். ஐடிஐ, 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
யந்திரா இந்தியா லிமிடெட் (Yantra India) என்பது மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய பாதுகாப்பு படை பிரிவுக்கு தேவையான இயந்திரங்கள், ராணுவ பீரங்கிகள் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது.

பணியிடங்கள் விவரம்:
நாக்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் திருச்சி, மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.
ஐடிஐ அல்லாத பிரிவுக்கான பணியிடங்கள் - 2,843
ஐடிஐ பிரிவுக்கான பணியிடங்கள் - 1,136
ஹை எனர்ஜி தொழிற்சாலை - திருச்சி
Ex- ஐடிஐ மெஷினிஸ்ட் - 40 பணியிடங்கள்
Ex-ஐடிஐ ஃபிட்டர் - 30 பணியிடங்கள்
Ex- ஐடிஐ டர்னர் - 10 பணியிடங்கள்
Ex- ஐடிஐ எலக்ட்ரீஷியன் - 03 பணியிடங்கள்
Ex- ஐடிஐ வெல்டர் - 02 பணியிடங்கள்
Ex- ஐடிஐ எலக்ட்ரோபிளேட்டர் - 03 பணியிடங்கள்
சென்னை ஆவடி - தொழிற்சாலை
ஐடிஐ அல்லாத தையல்காரர் (ஆண்கள்) - 20
ஐடிஐ தையல்காரர் (ஆண்கள்) - 13
ஆயுதத் தொழிற்சாலை - திருச்சிராப்பள்ளி
மெஷினிஸ்ட் - 18
Ex- ஐடிஐ மெஷினிஸ்ட் - 32
Ex- ஐடிஐ ஃபிட்டர் - 28
Ex- ஐடிஐ டர்னர் - 09
Ex- ஐடிஐ மெஷினிஸ்ட் (கிரைண்டர்) - 07
Ex-ஐடிஐ எலக்ட்ரீஷியன் - 05
Ex-ஐடிஐ வெல்டர் (G&E) - 03
Ex-ஐடிஐ எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 06
Ex- ஐடிஐ மெக்கானிக் மெஷின் டூல் பராமரிப்பு - 05
Ex-ஐடிஐ மெக்கானிக் (குளிர்பதனம் மற்றும் ஏசி) - 01
Ex-ஐடிஐ மெக்கானிக் மோட்டார் வாகனம் - 01 அனைத்தும் அப்ரெண்டீஸ் (பயிற்சி பணியிடங்கள் ஆகும்)
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். ஐடிஐ அல்லாத பிரிவு பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும். ஐடிஐ பிரிவு பணிக்கு துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
03.03.2026 தேதிப்படி குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆபத்து மிக்க தொழிற்சாலை பிரிவில் பணியாற்ற 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அனைத்து வயதினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?
ஐடிடி பிரிவு பணிகளுக்கு மாதம் ரூ.8,200 சம்பளம் வழங்கப்படும்.
ஐடிஐ அல்லாத பிரிவு பணிகளுக்கு மாதம் ரூ.9,600 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி வயது வரம்பு உள்ளதா? என்பதை உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200 கட்டணம் ஆகும். பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ. Rs.100/- கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க கடைசி தேதி: 03.03.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruit-gov.com/












Click it and Unblock the Notifications