ITR வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? பல லட்சங்களை இழக்க நேரிடும்.. அரசு எடுத்த முக்கிய மூவ்
சென்னை: வருமானத்தை தவறாக கணக்கு காட்டி, அதிக வரி refund களை கோரினால், கடுமையான அபராதங்கள் விதிக்கப்படலாம், உங்கள் வருமானத்தின் மீதான வரியில் 200% அபராதம் விதிக்கப்படலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. அதாவது NPS.. தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடுகள் செய்தால் அதற்கு மட்டும் விலக்கு பெற முடியும். அதை தவிர வேறு எதற்கும் ஒரு ரூபாய் கூட விலக்கு பெற முடியாது. 12.75 லட்சம் ரூபாய் வரை இதில் உங்களுக்கு வரியே இருக்காது. முறைப்படி இதில் HRA விலக்கு.. அதாவது வீட்டு வாடகைக்கு கொடுக்கப்படும் படியில் விலக்கு பெறவும் முடியாது.
ஆனால் பழைய முறையில் விலக்குகளை பெற முடியும். பழைய முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தவறான விவரங்களை கொடுக்காதீர்கள்
அதே சமயம் இனிமேல் வருமான வரி விலக்கு தொடர்பான ITR ஃபைல் செய்யும் போது முறையான rent விவரங்களை அளிக்க வேண்டும். பொய்யாக கணக்கு காட்டினால் அதை தீவிரமாக பரிசீலனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. கூடுதல் கணக்கு காட்டும் பட்சத்தில் உங்களின் வீட்டு ஓனரின் பான் கார்டை சோதனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. வீட்டு ஓனரின் பான் கார்டு பொய்யாக தரப்பட்டு இருந்தால் அதற்கும் ஆக்சன் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர். இதை சோதனை செய்கின்றனர்.
அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பலர் இதை பயன்படுத்தி விலக்குகளை பெற்ற நிலையில் அரசு இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.
ஏஐ மாடல் கண்காணிக்கிறது
வருமான வரித்துறை இந்த வருடம் அதிநவீன ஏஐ மாடல் மூலம் உங்கள் வருமான வரி ITR ரிட்டர்னை சோதனை செய்ய உள்ளது. கடந்த வருடமே ரிட்டர்ன் தாக்கலை சோதனை செய்ய ஏஐ பயன்படுத்தப்பட்டது. இந்த முறை அதில் அதிநவீன மாடல் பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. இன்னும் பலருக்கு ITR விண்டோ திறக்கவில்லை என்றாலும் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். ஏப்ரல் 2ம் தேதி முதல் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் கால அவகாசம் தொடங்கி உள்ளது. ஆனால் ஏப்ரல் தொடங்கி 4 வாரம் ஆகியும் கூட.. இதுவரை வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் தளத்தில் இந்த நிதி ஆண்டிற்கான அதாவது 2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதுவரை சம்பளதாரர்கள் பலரும் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத சூழல் உள்ளது.
வருமானத்தை தவறாக கணக்கு காட்டி, அதிக வரி refund களை கோரினால், கடுமையான அபராதங்கள் விதிக்கப்படலாம், உங்கள் வருமானத்தின் மீதான வரியில் 200% அபராதம் விதிக்கப்படலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. தவறாக கணக்கு கட்டப்பட்ட வருமானத்தின் மீதான வரியின் 200% அபராதம் பிரிவு 270A இன் கீழ் விதிக்கப்படலாம். அதேபோல் தகுந்த வழக்குகளில் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கை வரித்துறை தாக்கல் செய்யலாம். கிரினிமினல் வழக்கு இல்லாமல் வேறு வகையான வழக்கு பதிவு செய்யப்படலாம். முறைகேடு செய்யப்பட்ட வரி ₹25 லட்சத்திற்கு மேல் இருந்தால், 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். மற்ற வழக்குகளில், 3 முதல் 2 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இனி சம்பளம் பெறும் ஊழியர்கள், எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க உண்மையான, சரியான மற்றும் முழுமையான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
எப்போது திறக்கும்
2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதை படிப்படியாக திறக்க உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏழு ஐடிஆர் படிவங்கள் வழங்கப்பட்டது, எனவே வருமான வரி கணக்கு தாக்கல் இந்த மாதம் தொடங்குவதை உறுதிசெய்ய தேவையான படிவங்களை வரித்துறை விரைவில் வழங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த படிவங்கள் அளிக்கப்படும். பொதுவாக, இந்த பயன்பாடுகள் ஏப்ரல் முதல் படிப்படியாக வெளியிடப்படும். குறிப்பாக ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 போன்ற படிவங்களுக்கு வருமான வரி போர்ட்டலில் அனுமதி தரப்பட்ட உடனே ITR தொடங்கும்.
ஏற்கனவே இந்த படிவம் திறந்து ITR தாக்கல் செய்தவர்களுக்கு.. இன்னும் 15-20 நாட்களில் refund கிடைக்கும். இனி தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 1 மாதத்தில் refund கிடைக்கும். ஏப்ரல் முதல் நீங்கள் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். நீங்கள் அந்த ஸ்லாபில் இருக்கும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் பின் வரும் தவறுகளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரிட்டர்ன் refund தொகை கிடைக்காமல் போகலாம்.












Click it and Unblock the Notifications