ZOHO-வில் புதிய வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி நியமனம்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. சென்னை, மதுரை, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணி என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்துக்கு பேக் எண்ட் டெவலப்பர் (Back End Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட கல்வி தகுதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் கூட சில முக்கிய தகுதிகள் விண்ணப்பம் செய்வோரிடம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜாவா, பைத்தான் பயன்படுத்தி பேக் என்ட் சிஸ்டம்ஸ் கிரியேட் செய்து டெப்ளாய் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஆப்ஜெக்ட் ஓரியன்டன் லேங்குவேஜில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும்.
ஹை கோடிங் ஸ்டேன்டர்ஸ், டிசைன் மற்றும் பெர்பாமன்ஸ் இருக்க வேண்டும். டீமை லீட் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அதுமட்டுமின்றி ஜாவா அல்லது பைத்தான் தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர பேசிக் டேட்டாபேஸ், நெட்வொர்க்கிங் அறிவு, Tomcat போன்ற சர்வர் - ஹோஸ்டர்ட் பிளாட்பார்ம்ஸ் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதோடு பேக்எண்ட் டெவலப்பர் பணியில் குறைந்தபட்சம் 4 முதல் 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சம்பளம் பற்றிய விபரம் இண்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது ஒவ்வொருவருக்கும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தற்போதைய பணிக்கான அறிவிப்பு வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்டது. இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு எப்போது வேண்டுமானாலும் நிறைவு பெறலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications