Coding தேவையில்லை... அனுபவமும் வேண்டாம்.. நெல்லை Zoho-வில் சூப்பர் வேலை
திருநெல்வேலி: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் வேண்டாம். அதேபோல் Coding மற்றும் புரோகிராமிங் லேங்க்வேஜ்கள் தேவையில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்கள் திருநெல்வேலி தருவையில் உள்ள ஜோஹோவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஜோஹோ.. தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து அடிக்கடி பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் ஜோஹோ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியில் அமைந்துள்ள ஜோஹோவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டர் (Content Writer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 0 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்கலாம். பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் அவர்களுக்கு குறிப்பிட்ட தகுதி என்பது வேண்டும். அந்த வகையில் கிராமர் மிஸ்டேக் இன்றி ஆங்கிலத்தில் சிம்பிளாக எழுத தெரிந்திருக்க வேண்டும். கிரியேட்டிவ் ஸ்கில்ஸ், ஸ்டோரி டெல்லிங் திறமை இருக்க வேண்டும். கன்டென்ட்டுகளை சுவாரசிய எழுத தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆர்ட்டிக்கிள் மற்றும் பிளாக்ஸ் எழுதிய அல்லது படித்த அனுபவம் இருக்க வேண்டும். எஸ்இஓ மற்றும் சமூக வலைதளம் பற்றிய அடிப்படையை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் டூல்ஸ், சிஎம்எஸ் பிரச்சனை மற்றும் சமூக வலைதள சேனல்கள் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். டீமாகவும், தனி ஆளாகவும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் திருநெல்வேலி மாவட்டம் தருவையில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான மாத சம்பளம் அல்லது ஆண்டு ஊதியம் பற்றி தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications