இது தான் திருநெல்வேலி ஜோஹோ ஆபீஸ்.. ஐடி நிறுவனம் போல் இல்லாமல்.. சூப்பரான குடியிருப்பு போல்!
திருநெல்வேலி: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (Zoho) மதுரையை போல் திருநெல்வேலியில் அலுவலகத்தை அமைத்து வருகிறது. சாப்ட்வேர் நிறுவனம் போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் அமைந்துள்ள ஜோஹோ ஆபிஸ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (Zoho) அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தென்காசியைச் சேர்ந்தவரான ஸ்ரீதர் வேம்பு தான் அதன் சிஇஒ ஆவார் . இவர் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பிரம்மாண்டமான அலுலவலகத்தை விட்டுவிட்டு, தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திற்கு திரும்பி வந்தார்.

அங்கிருந்தபடியே உலகம் முழுவதும் தனது அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை கவனித்து வருகிறார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் ஸ்ரீதர் வேம்பு, தன் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டிய மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
அதேநேரம் சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற மெட்ரோ நகரங்களை தாண்டி, இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களிலும் ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் கிளைகளை ஆரம்பித்து வருகிறார். அந்த வகையில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிலிக்கான், மதுரை கப்பலூரில் 40 ஏக்கர் பரப்பளவில் கிளை அலுவலகத்தை அமைத்து வருகிறார். இந்த கிளை திறக்கப்பட்ட பின்னர் சுமார் 1100 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பபடுகிறது.
கடந்த வாரம் மதுரை ஜோஹோ அலுவலகத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. சாப்ட்வேர் நிறுவனமான நட்சத்திர விடுதியா என்கிற அளவில் அந்த புகைப்படங்கள் இருந்தன நட்சத்திர விடுதிகள் அறைகள் எப்படி இருக்குமோ, அந்த அளவிற்கு ஜோஹோ நிறுவன அறைகளும், அலுவலகத்தின் கட்டிட வடிவமைப்பும் சிறப்பாக இருந்தன.

இதனிடையே திருநெல்வேலியில் ஜோஹோ நிறுவனம் அலுவலகத்தை அமைத்துள்ளது. சாப்ட்வேர் நிறுவனம் போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் அமைந்துள்ள ஜோஹோ ஆபிஸ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.













Click it and Unblock the Notifications