நான் எள்ளுனு சொன்னா... எண்ணெய்யா நிக்குறாரே என் கணவர்

Subscribe to Oneindia Tamil

வயதான கணவன் மனைவியான அவர்கள் இருவருக்குமே மிகவும் ஞாபகமறதி. இதற்காக டாக்டரிடம் சென்று காண்பித்தார்கள்.

மிகவும் வயதானவர்கள் ஆதலால், மாத்திரை எதுவும் கொடுக்க விரும்பாத அந்த டாக்டர் இருவருக்கும் ஒரு டிப்ஸ் கொடுத்தார். அதாவது எதை செய்ய நினைக்கிறீர்களோ முதலில் அதை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அச்செயலைத் தொடங்குங்கள் என அறிவுரை வழங்கினார்.

இருவரும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். இனி, என்ன நடக்கிறது நீங்களே பாருங்களேன்....

ஜமாய்த்து விடுகிறேன்....

ஜமாய்த்து விடுகிறேன்....

மனைவி: அன்பே, எனக்கு ஒரு ஐஸ்கிரீம் செய்து தருகிறீர்களா...?

கணவன்: அவ்வளவு தானே ஜமாய்த்து விடுகிறேன்.

இப்பப் பாரு....

இப்பப் பாரு....

மனைவி : டாக்டர் சொன்னது போல், முதலில் எவ்வாறு ஐஸ்கிரீம் செய்ய வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...

கணவன் : என்னை என்ன அவ்வளவு ஞாபக மறதிக்காரன் என நினைத்தாயா...? அதெல்லாம் தேவையில்லை.

ஸ்டாபெரி பெண்ணே...

ஸ்டாபெரி பெண்ணே...

மனைவி : சரி, உங்கள் இஷ்டம். நீங்கள் தயாரிக்கும் ஐஸ்கிரீம் மீது சிறிது சாக்லெட் துருவல்களையும், ஸ்டாபெரி துண்டங்களையும் போட்டு அலங்கரித்து கொண்டு வாருங்கள்.

கணவன் : சரி....

இதோ ரெடி....

இதோ ரெடி....

அடுப்படிக்குள் சிறிது நேரம் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்கிறது. பின்னர் கணவர், கையில் தட்டுடன் மனைவியை நெருங்குகிறார். அதில், பொரித்த கோழித்துண்டுகளும்,தக்காளி சாஸ்-ம் இருக்கிறது. மனைவிக்கு கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்....

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்....

மனைவி : டாக்டர் சொன்ன மாதிரி பேப்பர்ல எழுதி வச்சுக்கோங்கனு சொன்னா, கேட்க மாட்டேங்கறீங்க.. பாருங்க உங்க ஞாபக மறதி எவ்ளோ அதிகமாயிடுச்சுனு...

கணவர் : ஏன் என்னாச்சு....?

வாட் பிளட்... சேம் பிளட்....

வாட் பிளட்... சேம் பிளட்....

மனைவி : நான் முட்டையை ஆம்லெட் போட்டு எடுத்து வரச் சொன்னால், நீங்கள் கோழியைப் பொரித்து எடுத்து வந்திருக்கிறீர்களே...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+